அரசியல்கவர் ஸ்டோரிசென்னைதமிழ்நாடு

கொள்ளை அடிப்பதை மத்திய அரசு கண்டுக்கொள்ளாமல் இருக்கவே அதிமுக நீட் தேர்வுக்கு ஆதரவு – மு.க.ஸ்டாலின் ஆவேசம்

நீட் தேர்வை பாஜக அரசு கொண்டு வந்தபோது , திமுக-காங்கிரஸ் ஆட்சியில் இல்லை...

நெய்வேலியில் நடைப்பெற்ற திமுக முப்பெரும் விழாவில், மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி சிலையை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பின்னர் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர் விரோத அரசாக செயல்படுகிறது என்றார். தொழிலாளர் உரிமையை பறிக்கும் திட்டங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு துணை போகிறது. பொருளாதாரம் மீட்க வெளியிட்ட திட்டங்களை மத்திய அரசு இன்னும் செயல்படுத்தவில்லை. தொழிலாளர்களையும், விவசாயிகளை முதல்வர் பழனிசாமிக்கு பிடிக்காது. ஆனால் நானும் ஒரு விவசாயி என்று அவர் கூறிக் கொள்வார்.

நீட் தேர்வினால் ஏராளமான மாணவர்கள் தற்கொலை கொண்டுள்ளனர் ஆனால் என்னை பொருத்தவரை மத்திய மாநில அரசுகள் செய்த கொலை. தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வு குறித்து திமுக பேசியதை வெளியிடாமல் முதல்வர் பேசியதை மட்டுமே வெளியிட்டுள்ளனர்.  2016 ஆம் ஆண்டு நீட் தேர்வை கொண்டுவந்தது பாஜக, அதற்கு ஆதரவாக இருந்தது அதிமுக. அப்போது திமுகவும், காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் இல்லை. எனவே, இந்த வரலாறு தெரியாமல் முதலமைச்சர் உளருகிறார்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று 7 மாநில முதலமைச்சர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்தார்கள். ஆனால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், ரத்து செய்ய வேண்டும், அனுமதிக்க மாட்டோம் என்று அதிமுக பொதுக்குழுவில் பேசினார்கள், தேர்தல் அறிக்கையையில் கூறினீர்கள், சட்டமன்றத்திலும் தீர்மானம் போடப்பட்டது ஆனால் அதை நிறைவேற்றமால் இருக்கிறார்கள் என குற்றம்சாட்டினார்.

முதல்வர் அடிக்கும் கொள்ளையை மத்திய அரசு கண்டுக்கொள்ளாமல் இருக்க, அதிமுக நீட் தேர்வுக்கு ஆதரவாக செயல்படுகிறது. கோழைத்தனத்தை மறைக்க, திமுகவை குறை சொல்லும் முதல்வரின் ஆட்டம் இன்னும் 6 மாதம் மட்டுமே. இவ்வாறு திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button