கிரைம்தமிழ்நாடுராணிப்பேட்டை

ரயிலில் கழிவறைக்கு சென்ற கல்லூரி மாணவியை ஆபாச வீடியோ எடுக்க முயன்ற டிக்கெட் பரிசோதகர் கைது

சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் கோவையில் உள்ள கல்லூரியில் முதுகலைப் பட்டபடிப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரி விடுதியை காலி செய்து கொண்டு சேரன் அதிவிரைவு ரயிலில் சென்னை புறப்பட்டார்.

அதிகாலையில் அரக்கோணம் ரயில் நிலையத்தை கடந்தபோது, மாணவி கழிவறைக்கு சென்றார். அப்போது கழிவறையின் வெளியே வாலிபர் ஒருவர் மாணவியை செல்போனில் படம் பிடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதை கவனித்த மாணவி அலறி கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. ரயில் பெட்டியில் தூங்கிய சக பயணிகள் எழுந்து மாணவியிடம் விசாரித்தனர்.

அப்போது சம்பவ இடத்தில் இருந்த வாலிபரின் செல்போனை பிடுங்கி பார்த்த போது, மாணவியை படம் பிடிக்க முயன்றது தெரிய வந்தது. இதுதொர்பாக ரயில்வே ஹெல்ப் லைனில் மாணவி புகார் தெரிவித்தார். ரயில் பெரம்பூர் ரயில் நிலையத்தை அடைந்ததும், வாலிபரை பிடித்து ரயில்வே போலீசார் விசாரித்தனர்.

அந்த வாலிபர் சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த பயணச்சீட்டு பரிசோதகர் மேகநாதன் (26) என்பது தெரிய வந்தது. மாணவியின் புகாரை பெற்ற பெரம்பூர் ரயில் போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு மாற்றப்பட்டது.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட அரக்கோணம் ரயில்வே போலீசார், பின்னர் மேகநாதனை நீதிபதி முன் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். ஒடும் ரயிலில் கழிவறைக்கு சென்ற கல்லூரி மாணவியை ஆபாச வீடியோ எடுக்க முயன்ற டிடிஆர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பயணிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Related Articles

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button