அரசியல்சென்னைதமிழ்நாடு

மு.க. அழகிரி மீண்டும் திமுகவில் இணைகிறாரா? சமாதானப் பின்னணியில் இருப்பவர் யார்?

தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி மதுரையில் இருந்து கொண்டு தென் மாவட்டங்களை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். தம்பி மு.க.ஸ்டாலினுக்கும், அண்ணனுக்கும் இடையே நடைப்பெற்ற அதிகார மோதலால், கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் மு.க.அழகிரி அதிரடியாக நீக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து, திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் கூறி வந்தார். கட்சியில் இருந்து நீக்கிய பிறகும், பல ஆதரவாளர்கள் இவருக்கு பக்க பலமாக இருந்து வந்தனர். கருணாநிதியின் மறைவுக்கு பின்னர், அரசியலில் நிகழ்வுகளில் இருந்து அவர் சற்று விலகியே இருந்து வருகிறார்.

இதனிடையே, ரஜினி கட்சி ஆரம்பித்தால், அவரது நண்பரான அழகிரிக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்றும் பேசப்பட்டது. மேலும், கலைஞர் திமுக என்ற தனிக்கட்சியை மு.க. அழகிரி தொடங்கப் போவதாகவும் கூறப்பட்டது. ஆனாலும், ஸ்டலினும், அழகிரியும் மீண்டும் இணைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து மதுரையில் போஸ்டர்களை ஒட்டி உடன் பிறப்புகள் பரபரப்பை ஏற்படுத்தினர்.

இருப்பினும், கடந்த சில வாரங்களாக தான் வழக்கமாக சந்திக்கும் தன்னுடைய ஆதரவாளர்களைக் கூட மு.க.அழகிரி சந்திக்காமல் தனிமையிலே இருந்துள்ளார். இந்த சூழ்நிலையில், அழகிரிக்கு உடல்நலம் சரியில்லை என்றும், கால்கள் சற்று வீங்கியிருப்பதாக சென்னை கோபாலபுரத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அவரது உறவினர்கள் வருத்தம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவலை அடுத்து, அழகிரியை தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து ஸ்டாலின் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரின் பேச்சு குடும்ப அக்கறையில் நலம் விசாரிப்பா? அல்லது அரசியல் இருக்கிறதா? என்பது புரியாத புதிராக உள்ளது. ஆனால், அவர்களின் உரையாடலைப் பற்றி அறிந்த ஓரிரு திமுக புள்ளிகள் மட்டும் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button