அரசியல்கவர் ஸ்டோரிசென்னை

தி.மு.க. ஒன்றிய குழு செயலாளர்கள் 4 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர் – கட்சித் தலைமை அதிர்ச்சி

ரூ.1 கோடி கொடுத்தால் தான் தி.மு.க.வில் பதவி...

சென்னை தியாகராய நகர் கமலாலயத்தில், ராமநாதபுரம் திமுக ஒன்றிய குழு செயலாளர் கதிரவன், ஆர்எஸ் மங்கலம் ஒன்றியக் குழு செயலாளர் மதிவாணன் , கடலாடி ஒன்றியக்குழு  செயலாளர் ராஜசேகர் ஆகியோர் திமுகவில் இருந்து விலகி, பாஜக மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். பரமக்குடி திமுக ஒன்றியக் குழு செயலாளர் தினகரன் நாளை பாஜகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

பாஜகவில் இணைந்த பின் முன்னாள் திமுக ஒன்றிய குழு செயலாளர் கதிரவன் செய்தியாளர்களை சந்தித்தார். ராமநாதபுரம் மாவட்ட ஒன்றிய குழு செயலாளராக க 20 ஆண்டுகளாக திமுகவுக்காக உழைத்துள்ளேன். அந்த பகுதியில் பெரும் நற்பணிகளையும் செய்து இருக்கிறேன். ஆனால் என்னை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிவிட்டார்கள். இதுபற்றி மாவட்ட தலைவரும், திமுக தலைவரும் இதனை பொருட்டாகவே கருதவில்லை.

திமுக பொறுத்தவரை பணம் வசூல் செய்து கட்சிக்கு கொடுப்பவர்களுக்கு மட்டும் தான் மரியாதை. ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்ட செயலாளர்களின் பொறுப்பானது ஒரு கோடி ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

திமுக கட்சி நடத்தவில்லை வியாபாரம் தான் நடத்துகிறார்கள். ஆனால் பாஜகவில் சாதாரண அடிப்படை தொண்டன் கூட நாட்டின் பிரதமர் ஆகியுள்ளார். அதேபோன்று அதிமுகவில் அடிப்படை தொண்டனும் முதலமைச்சராக ஆகலாம். ஆனால் திமுகவில் மட்டும் ஒருபோதும் ஆக முடியாது. இவ்வாறு ராமநாதபுரம் திமுக ஒன்றிய குழு செயலாளர் கதிரவன் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button