Uncategorizedஅரசியல்சென்னைதமிழ்நாடு

மூத்த அமைச்சரின் அண்ணன் மகன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்

தொண்டர்களுக்கு எவ்வித நல்ல விஷயங்களையும் செய்யவில்லை...

2021 தமிழக சட்டச்சபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆட்சியை பிடிக்க அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதுதவிற, தேமுதிக, பாமக, விசிக போன்ற கட்சிகளும் யாருடன் கூட்டணி வைப்பது குறித்து ஆலோசித்து வருகின்றன.

இதற்கிடையில் பிற கட்சிகளில் இருந்து முக்கிய பிரமுகர்களை தன்பக்கம் இழுக்க அதிமுக, திமுக, பாஜக ஆகிய கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்தில் இருபெரும் தலைவர்களாக விளங்கிய கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, நடைபெறும் முதல் சட்டச்சபை தேர்தல் சில மாதங்களில் நடைபெறவுள்ளதால், தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்தநிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அண்ணன் கே.ஏ.காளியப்பனின் மகன் செல்வம் திமுகவில் இணைந்துள்ளார். திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் இணைந்தார். அவருடன் மற்றும் கோபி கே.ஈ.கதிர்பிரகாஷ், கோபி ஆர்.துரைசாமி ஆகியோரும் திமுகவில் இணைந்தனர். ஆளும் கட்சியை சேர்ந்த மூத்த அமைச்சரின் உடன் பிறந்த அண்ணன் மகன் திமுகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வம், “கடந்த 45 ஆண்டுகளாக என் தந்தையும், கடந்த 30 ஆண்டுகளாக நானும் அதிமுக அமைச்சர் செங்கோட்டையனுக்காக கோபி தொகுதியில் பணியாற்றி உள்ளோம். ஆனால், கோபி தொகுதியில் பணியாற்றிய தொண்டர்களுக்கு, அவர் எந்தவித நல்ல விஷயங்களையும் செய்து கொடுக்கவில்லை. எனவே அதிமுகவில்  இருந்து விலகி திமுகவில் இணைந்திருக்கிறோம். குடும்பத்தில் (பெரியப்பா செங்கோட்டையன்) எங்களுக்குள் தனிப்பட்ட முறையில் எந்த விதமாக கருத்து வேறுபாடும் இல்லை. இவ்வாறு செல்வம் கூறினார்.

Related Articles

4 Comments

  1. Does your blog have got a contact page? I’m having a tough time
    locating it but, I’d want to shoot you an email. I’ve got some
    creative ideas for the blog you might be enthusiastic about hearing.
    In either case, great blog and so i look ahead to seeing it develop as time passes.

    my page – GwenJEckberg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button