அரசியல்சென்னைதமிழ்நாடு

தி.மு.க. தேய்பிறை, அ.தி.மு.க. வளர்பிறை – சசிகலாவிற்கு யாரும் பில்டப் கொடுக்க வேண்டாம்

பெரியாரின் 142-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ஜெமினி மேம்பாலம் பகுதியில் அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,  முரண்பாடுகளின் மொத்த உருவம் தான் தி.மு.க. கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பேரவை நடத்தக்கூடாது என்று கூறிய திமுக தான், தற்போது மாற்றி பேசி வருகிறார்கள். அதிமுக கூட்டணியில் இருந்து யாரும் வெளியேற வாய்ப்பில்லை என்றும் மாறாக பல கட்சிகள் தங்கள் அணிக்கு வர வாய்ப்பு உள்ளது.

திமுக தேய்பிறை போல் தேய்ந்து கொண்டிருக்கிறது, ஆனால் அதிமுகவோ வளர்பிறை போல் வளர்ந்து வருகிறது. சசிகலா வந்தாலும் வரவில்லை என்றாலும் அதிமுகவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. சசிகலாவிற்கு பில்டப் கொடுப்பதே ஊடகங்கள் தான். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button