அரசியல்கவர் ஸ்டோரிசென்னைதமிழ்நாடு

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனைகள் உயர்த்தி சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் செப்டம்பர் 14- ஆம் தேதி தொடங்கியது. 3 நாட்கள் மட்டுமே நடக்கும் சட்டசபையின் 2வது நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, நீட் தேர்வு தொடர்பாக சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இதனை தொடர்ந்து மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா, சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும்,  வரும் காலத்தில் மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக முதல்வர் பழனிசாமி கூறினார்.

இந்தநிலையில் சட்டப்பேரவையின் கடைசி நாள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடியது. பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி வரதட்சணை கொடுமைச் சட்டம் 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும், பெண்களை பின் தொடர்ந்து செல்வது, தொந்தரவு கொடுப்பது போன்றவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையை 5 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளாக உயர்த்தவும் முதல்வர் பழனிசாமி பரிந்துரை செய்துள்ளார். பாலியல் தொழிலுக்காக 18 வயதுக்குட்பட்ட பெண்களைவிற்பது, வாங்குவது தொடர்பான குற்றத்திற்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்ட புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி கூறினார்.

தொடரந்து பேசிய அவர், பெண்கள் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் பெண் காவல் நிலையங்கள் தமிழகத்தில் துவங்கப்பட்டதாகவும், மகளிர் விரைவு நீதிமன்றம் அமைக்கவும் உத்தரவிடப்பட்டதாகவும் கூறினார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருவதாகவும் முதல்வர் பழனிசாமி பேரவையில் தெரிவித்தார்.

இன்றைய பேரவைக் கூட்டத்தில் கொரோனா கால செலவுகள் தொடர்பான துணை நிதிநிலை அறிக்கையை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார். மேலும் அண்ணா பல்கலைக்கழக திருத்தச் சட்டமுன்வடிவு, உட்பட18 சட்ட முன்வடிவுகளும் தாக்கல் செய்யப்பட உள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button