உலகம்

முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு நூதன தண்டனை – அரசு அதிகாரிகள் கெடுபிடி

சீனாவின் வூஹான் நகரிலிருந்து தோன்றிய கொரோனா வைரஸ், 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. நோய் தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில் உலகமே போராடி வரும் நிலையில், இதற்காக தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியில், மருத்துவ குழுவினர் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

உலகளவில் சுமார் 2 கோடியே 97 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 9 லட்சத்து 39 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 2 கோடிக்கும் அதிகமானோர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் அடுத்தடுத்து மூன்று இடங்களை பிடித்துள்ளது.

கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தோனேசியா நாடு கொரோனாவால் அதிகம் பாதிப்பைச் சந்தித்துள்ளது. இந்தோனேசியாவில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சுமார் 9 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.  தென் கொரியா, நியூசிலாந்து, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் நோய் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளன.

இந்தநிலையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முக கவசம் அணிவது பல்வேறு நாடுகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் முக கவசம் அணியாத நபர்களுக்கு சிறை, அபராதம் உள்ளிட்ட தண்டனைகளும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தோனேசியாவில் முக கவசம் அணியாமல் போலீசாரிடம் சிக்கினால், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு கல்லறைகளை தோண்டுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். நூதன தண்டனைக்கு பயந்து அங்குள்ள மக்கள் முக்கவசம் அணியாமல் வெளியே வருவதில்லை என கூறப்படுகிறது.

இதனிடையே ஏற்கெனவே பரவுவதை விட அதிக வேகமாக பரவக்கூடிய கொரோனா வைரஸ் இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டை சேர்ந்த இஜ்க்மன் மூலக்கூறு உயிரியல் கழகம் அண்மையில் தெரிவித்திருந்தது. டி614ஜி மாற்றமடைந்த இந்த வைரஸ் ஏற்கெனவே ஐரோப்பா, அமெரிக்கா, மலேசியா மற்றும் சிங்கப்பூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button