கிரைம்சென்னைதமிழ்நாடு

ஆடு, கோழிகளை காரில் வந்து நூதனமாக திருடிச்சென்ற இளைஞர்கள் – சென்னையில் பரபரப்பு

சென்னையை அடுத்த திருவேற்காடு மேல் அயனம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜலால் (27). இவர் இதே பகுதியில் இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 4 ஆடுகள் மற்றும் 15 கோழிகளை கடைக்குள் வைத்து விட்டு சென்றார். காலையில் வந்து பார்த்தபோது கடைக்குள் இருந்த ஆடு மற்றும் கோழிகள் இல்லாததை கண்டு ஜலால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருவேற்காடு காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, கொள்ளையர்கள் குறித்து விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினர்.

இந்தநிலையில், திருநின்றவூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த காரை மடக்கி உள்ளே இருந்தவர்களிடம்  விசாரித்தனர். பின்னர் காரை சோதனை செய்தபோது, ஆடுகள், கோழிகள் இருந்ததால், போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

காரில் வந்தவர்களிடம் துருவி துருவி விசாரித்தபோது, திருவேற்காட்டில் இருந்து திருடி  கொண்டு வந்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இருவரையும் திருவேற்காடு காவல் நிலையத்தில்  ஒப்படைக்கப்பட்டனர். சப் இன்ஸ்பெக்டர் சைமன் விசாரணை நடத்தியதில், பொன்னேரி சேர்ந்த அஜய் (23), அஜித் (22) என்பதும், திருவேற்காடு பகுதியில் காரில் வந்து ஆடுகள் மற்றும் கோழிகளை திருடிச் சென்றதும் தெரியவந்தது.

இவர்களிடமிருந்து நான்கு ஆடுகள், 15 கோழிகள் மற்றும் காரை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தலைமறைவாக உள்ள இவர்களது கூட்டாளியை தேடி வருகின்றனர். திருவேற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் அடிக்கடி திருடு போவதாக புகார்கள் வந்துள்ளன. போலீசார் விரைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button