உலகம்தமிழ்நாடுநாகப்பட்டினம்

விஷ்ணு கோவிலில் 34 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சுவாமி சிலைகள் லண்டனில் இருப்பது கண்டுபிடிப்பு

15-ம் நூற்றாண்டுக்கு முந்தைய விஜயநகர சாம்ராஜ்யத்தைச் சேர்ந்தவை....

சிங்கப்பூரில் சிலைகள் மீட்பு பணிக்குழு என்ற அமைப்பை, தமிழகத்தைச் சேர்ந்த விஜயகுமார் நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் மூலம், தமிழக கோவில்களில் திருடப்பட்ட சிலைகளை மீட்க, காவல்துறைக்கு உதவி செய்து வருகிறார். இந்நிலையில், 34 ஆண்டுகளுக்கு முன்னர், பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள வியாபாரி ஒருவர், ராமர், லட்சுமணர் மற்றும் சீதா வெண்கல சிலைகள் விற்பனைக்கு இருப்பதாக இணையதளத்தில் படங்களை வெளியிட்டார்.

இதனை பார்த்த விஜயகுமார் மற்றும் அவரது மீட்பு பணிக்குழுவினர், தமிழக கோவில்களில் திருடப்பட்ட சிலைகள் என்பதை உறுதி செய்தனர். இதுதொடர்பாக, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். அந்த படங்களில் உள்ள சிலைகள் ராமர், லட்சுமணர் மற்றும் சீதா வெண்கல சிலைகள் என்றும், மயிலாடுதுறை மாவட்டம், அனந்தமங்கலம் அனந்தமங்கலத்தில் உள்ள விஷ்ணு கோவிலில் இருந்து 1978-ம் ஆண்டு திருடப்பட்டது என்பதும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் உறுதி செய்தனர்.

இந்த சிலைகள் 15-ம் நூற்றாண்டுக்கு முந்தைய விஜயநகர சாம்ராஜ்யத்தைச் சேர்ந்தவை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தமிழக கோவில்களுக்கு சொந்தமான சிலைகள் என்பதற்கான ஆதாரங்களை, பிரிட்டன் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தகவலறிந்த லண்டன் வியாபாரி, ராமர் உள்ளிட்ட மூன்று சிலைகளையும், லண்டன் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து, சிலைகளை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனை உறுதிப்படுத்தியுள்ள கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல், சிலைகளை மீட்க உதவிய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button