Uncategorizedஇந்தியாகவர் ஸ்டோரிடெல்லி

தென் இந்தியாவில் பதுங்கியிருந்த 122 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைதாகி உள்ளனர்

கொரோனா பரவல், பொருளாதார நெருக்கடி உள்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 14 ஆம் தேதி தொடங்கியது.  வரலாற்றில் முதல் முறையாக முகக்கவசம், சமூக இடைவெளி உள்பட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் மக்களவை மற்றும் மாநிலங்களை கூட்டம் நடைபெற்றது.

இந்தநிலையில், தென் இந்தியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கேரளா, ஆந்திரா,தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 122 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

கைது செய்யப்பட்ட ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த 122 பேரில் பெரும்பாலனோர் கேரளாவை சேர்ந்தவர்கள். ஐ.எஸ் பயங்கரவாதிகள் செயல்பாடுகள் கேரளாவில் தான் அதிகளவில் இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பினர் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தென் இந்தியாவை தவிர மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பீகார், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் இருக்கிறது. நாடு முழுவதும் பல்வேறு வழக்குகள் தொடர்பாக என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button