அரசியல்கவர் ஸ்டோரிதமிழ்நாடு

சசிகலா விடுதலை குறித்து ஆர்.டி.ஐ. மூலம் தகவல் – மேலும் சில மாதங்கள் தண்டனை கிடைக்க வாய்ப்பு

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து மூன்று பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் தண்டனை காலம் 2021 பிப்ரவரி மாதம் நிறைவடைகிறது.

500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என கடந்த 2017 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. அந்த சமயத்தில், ஏராளமான சொத்துக்களை சசிகலா வாங்கி குவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.  இதனையடுத்து, 2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் உட்பட 180-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையில் 60க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை துவக்கி, 1,500 கோடி ரூபாய் வரை, வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், பல நூறு கோடி ரூபாய்க்கு, சொத்துக்களில் முதலீடு செய்தது தொடர்பான ஆவணங்களும் சிக்கின.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார் என்ற தகவல் பரவியது. இந்த தகவலை, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகள் மறுத்தனர். சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, சசிகலா தரப்பினர் 2003-2005ம் ஆண்டுகளில் வாங்கிய சொத்துக்களை வருமானவரித் துறையினர் முடக்கியுள்ளனர். கடந்த 1 ஆம் தேதி பல்வேறு இடங்களில் 2-வது முறையாக நடத்தப்பட்ட சோதனையில், சசிகலா வாங்கி குவித்த ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பினாமி தடுப்புப் பிரிவு சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, 21 நாட்கள் சிறையில் இருந்துள்ளதால் அந்த நாட்கள் மட்டும் கழிக்கப்பட்டு, ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆர்.டி.ஐ. எனப்படும் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விகள் மூலம் சிறைத்துறையினர் விளக்கம் அளித்தாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் பெங்களூரு சிறையில் சசிகலா மீது எழுந்த லஞ்ச குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நன்னடத்தை மீறியதற்காக மேலும் சில மாதங்கள் அவருக்கு தண்டனை வழங்கப்படும் என பல்வேறு செய்திகள் பரவி வருகிறது.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, தேர்தலுக்கு முன் அவர் நிச்சயம் விடுதலையாகி விடுவார் என்று அவரது கட்சியினர் எதிர்பார்த்து கொண்டிருப்பதால் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என கூறப்பட்டது. ஆனால், சசிகலாவின் விடுதலை நாள் தள்ளிப்போனதால் அவரது ஆதரவாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button