கிரைம்தமிழ்நாடுராமநாதபுரம்

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கு – விசாரணையின் போது திடீரென மயங்கி விழுந்த இன்ஸ்பெக்டர்

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே எட்டிவயல் கிராமத்தை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி தெய்வானை (55) கடந்த 2019 ஆம் ஆண்டு வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்.  அப்போது, அவ்வழியாக வந்த ஒருவர், மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் மூதாட்டியை அவன் தாக்கியதாக கூறப்படுகிறது. தலையில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்த மூதாட்டியை, தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளான் காமக்கொடூரன்.

இதுதொடர்பாக சத்திரக்குடி போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதனையடுத்து, பரமக்குடி டிஎஸ்பி வேல்முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதன்படி தீயனூர் பகுதியை சேர்ந்த ரவி என்பவரை பிடித்து விசாரித்த போது, மூதாட்டியை பலாத்காரம் செய்து கொலை செய்திருப்பதும், பரமக்குடி அருகே செங்கல் சூளையில் ஓட்டுனராக பணியாற்றி வந்திருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து குற்றவாளியை கைது செய்து சத்திரக்குடி காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், குற்றவாளி ரவியிடம், மாவட்ட காவல்துறை எஸ்பி கார்த்திக், பரமக்குடி டிஎஸ்பி வேல்முருகன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பணியில் இருந்த சத்திரக்குடி பெண் இன்ஸ்பெக்டர் அமுதா திடீரென மயங்கி விழுந்தார். இதனால், அங்கு  பரபரப்பு ஏற்பட்டது.

ஓய்வின்றி பணியில் இருந்ததால் மன அழுத்தம் காரணமாக அவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, சிறிது நேரம் கழித்து இயல்பு நிலைக்கு திரும்பினார் இன்ஸ்பெக்டர் அமுதா. காவல் நிலையத்தில் குற்றவாளியை விசாரிக்கும்போது பெண் இன்ஸ்பெக்டர் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button