பொழுதுபோக்குமற்றவை

கனவு காண்பது நல்லதா? கெட்டதா? – கனவுகளால் கிடைக்கும் பலன்கள்…

உங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா?

‘உறக்கத்தில் வருவதன்று கனவு. நம்மை உறங்க விடாமல் செய்வதுதான் கனவு’ என்றார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். புரட்சி கவிஞர் பாரதியாரோ, “தூக்கமில்லாக் கண் விழிப்பே சக்தி’ என்று கூறியுள்ளார். நம் எதிர்காலம், நமது லட்சியங்கள், அவைகளை அடைவதற்கான வழிமுறைகளை எண்ணிப் பார்ப்பது ஒருவகையான கனவுதான்.

கனவு என்றால் என்ன?

தூங்கும்போது ஆழ்மனதில் ஏற்படும் எண்ணங்கள், சிந்தனைகள் மற்றும் உணர்வுகளின் வெளிப்பாடே கனவு. நாம் அனைவரும் வாழ்வில் ஒருமுறையாவது கனவு கண்டிருப்போம். நாம் அசந்திருக்கும்போது, மூளை மிகக்குறைந்த அளவில் வேலை செய்யும். அந்த நேரங்களில் படக்காட்சிகள் போல கனவுகள் நிகழும். இதனை அனுபவிப்பது, உணர்வது மட்டுமின்றி கனவில் நடப்பவைகள் உண்மையாகவே நிகழ்வதைப் போலத் தோன்றும்.

குறிப்பாக கனவு காணும் நேரங்களில் வேறெந்த வெளித் தூண்டுதல்களும் மனதிற்குள் நுழைவதில்லை. அதாவது தூங்கும்போது மட்டும் கனவு காண்பதில்லை. மாறாக நம்மை மறந்து ஓய்வு நிலையில் விழிப்புடன் இருக்கும்போதுகூட ஏதோ காட்சிகள் நம் முன் தெரியும் போது, திடீரென ஏதோ கனவு கண்டதுபோல் விழிக்கிறோம்.

கனவு ஏன் வருகிறது? 

  • அன்றாட வாழ்வின் நிகழ்வுகளின் மறைமுக பிரதிபலிப்பு
  • முந்தைய ஜென்மங்களின் நினைவுகளின் பிரதிபலிப்பு
  • ஆன்மா உடலை விட்டு பிரிந்து சென்று மீண்டும் வருவது.
  • அமானுஷயம் நம்மை தொடர்புகொள்ள முயற்சிப்பது

முந்தைய ஜென்மங்களின் நினைவுகளின் பிரதிபலிப்பு : சில கனவுகள் முற்றிலும் புதிராகவும் தொடர்ச்சியாகவும் வந்தால் அவை முந்தைய ஜென்மங்களின் நினைவுகளின் பிரதிபலிப்பு ஆகும்.

அமானுஷயம் நம்மை தொடர்புகொள்ள முயற்சிப்பது : இறந்தவர்களின் ஆன்மா நம் கனவு மூலம் நம்மை தொடர்பு கொள்ளும். அப்போது, ஆன்மா மற்றும் அமானுஷயம் இடையில் ஏற்படும் சண்டையில், நம்மை தூக்கத்திலிருந்து எழுப்பி விடும். இதன் காரணமாக நம் கனவு முழுமை பெறாமல் போய் விடும்.

உங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா ?

கோயில்: நமது கனவில் இறைவன் வாழும் கோயிலைக் காண்பது நன்மையான பலன்களைத் தரும். செய்யும் தொழில், வியாபாரம் முன்னேறும். நவீன ரக தொழில்களில் ஈடுபாடு உண்டாகும்.

ஏழ்மை நிலை: கனவில் ஒருவர் தாம் மிகவும் ஏழ்மை நிலையை அடைந்து விட்டாற்போல கண்டால், எதிர்பாராத வகையில் அவருக்கு திரண்ட செல்வம் வந்து சேரும். எல்லா வகையிலும் முன்னேறி உயர் நிலையை அடைவார்.

ஏமாற்றம்: ஒருவர் தாம் ஏமாற்றப்பட்டது போல் கனவு கண்டால், அவருக்கு தீமைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. வஞ்சக சூழ்ச்சிகளுக்கு அவர் ஆளாகி செல்வம் இழக்க நேரிடலாம்.

கண்டங்கள்: ஆபத்து உண்டாக்கும் கண்டங்களில் சிக்கிக் கொள்வதுபோல கனவு காண்பது நன்மையையே தரும்.

கற்பூரம்: கற்பூரம் எரிவதுபோல் கனவு கண்டால், பிறருக்காக வழக்குகளில் சாட்சி சொல்லவோ அல்லது ஜாமீன் கொடுக்கவோ நேரிடலாம் என பொருள் கொள்ளலாம்.

கீழே விழுவது போன்ற கனவு :  தவறான பாதையில் போவதால் ஏற்படும் மன அழுத்தத்தின் விளைவு தான் இந்த கனவு. நம் வாழ்வில் காதல், நட்பு அல்லது புது முயற்சி சரியாக போகவில்லை என அர்த்தம்.

கூட்டமாக நபர்கள் துரத்துவது போன்ற கனவு : இந்த எதிர்காலத்தை பற்றி அதிக பயம் உள்ளவர்களுக்கு ஏற்படும் கனவு.

நிர்வாணமாக இருப்பது போல் பெண்களுக்கு வரும் கனவு : புதிய இடங்களில் தூங்கும்போது பாதுகாப்பற்ற நிலையை உணர்ந்தால் பெண்களுக்கு இதுபோன்ற கனவு வரும்.

கர்பமாக இருப்பது போன்ற கனவு : பெண்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான அறிகுறி.

வாயில் பல் இல்லாதது போன்ற கனவு : தன் அழகை பற்றிய தாழ்வு மனப்பான்மை இருந்தால் இந்த மாதிரி கனவு வரும்.

சாவது போன்ற கனவு : நம்முடைய பெரிய இழப்பு அல்லது பிரிவின்போது இந்த மாதிரி கனவு வரும். காதல் தோல்வி, குழந்தைகள் பிரிவு, தொழிலில் தோல்வி.

வானத்தில் பறப்பது போன்ற கனவு : நாம் யாரையும் சார்ந்து இல்லாமல் தனித்து வாழ முடியும் என்ற உற்சாகத்தின் வெளிப்பாடு தான் இந்த கனவு.

அதுசரி விலங்குகள், பறவைகள், பாம்புகள் கனவில் வந்தால், நமக்கு ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றி தற்போது காண்போம்

நரி கனவில் வந்தால், சொந்த ஊரை விட்டுச் சென்று வேறு ஊரில் பிழைப்பு நடத்தவேண்டி வரும்.

குதிரை கனவில் வந்தால், வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குதிரையின் மீது ஏறி சவாரிசெய்வது போல கனவு வந்தால், நமக்கு வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

பசுக்கள் மேய்ச்சல் நிலத்தில் மேய்வது போல கனவு வந்தால், புதிய சொத்துக்கள் வாங்குவோம்.

காளை மாடு துரத்துவது போல கனவு வந்தால், வீண் பிரச்னைகள் வந்துபோகும்.

ஆடுகள் நம் கனவுகளில் வந்தால், புதிதாக காரோ, பைக்கோ வாங்கப்போகிறோம் என்று நாம் அறியலாம்.

பாம்பு கனவில் வந்தால், பெரிய அளவில் நமக்குத் தொல்லை தந்து வந்த கடன் பிரச்னைகள் நம்மை விட்டு விலகும்.

நாய்கள் குரைப்பது போல கனவு வந்தால், வீண்பழி வந்து சேரும். குரங்குகள் கனவில் வந்தால், வீட்டிலோ, நண்பர்களிடமோ தேவையற்ற வாக்குவாதங்கள் வரும். கடன் பிரச்னை அதிகரிக்கும்.

யானை நமது கனவில் வந்தால், நமக்குப் பெரும் செல்வம் ஏதோ ஒரு வகையில் கிடைக்கும். யானையின் மீது உட்கார்ந்துகொண்டு சவாரிசெய்வது போல கனவு வந்தால், நமக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். சொந்தமாக வீடு வாங்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கலாம்.

மயில் அகவுவது போல கனவு வந்தால், கணவன் மனைவி இடையே அன்பு மிகுதியாகும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கிளிகள் மரத்துக்கு மரம் செல்வது போல கனவு கண்டால், பழைய நண்பர்களைச் சந்தித்து பேசுவீர்கள். மனம் ரொம்பவே லேசாகிப்போகும். புதிய உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.

பறவைகள் வானத்தில் கூட்டமாக பறந்துசெல்வது போல கனவுகள் வந்தால், நெடுநாட்களாக நமக்கு இருந்து வந்த துன்பம் நம்மை விட்டு விலகும். புதிய பதவி தேடி வரும். புகழ் கூடும்.

கனவுகளை பதிந்து வைக்கக் கூடிய தொழில்நுட்பம் :

கனவுகளைப் பற்றிய பல ஆராய்ச்சிகள், கனவுகளுக்குப் பலன் பற்றிய ஆய்வுகள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இன்னும் பல சந்தேகங்கள் தீர்க்கப்படாமலே இருக்கின்றன. கனவில் வரும் சம்பவங்கள் பெரும்பாலும் நம் அன்றாட வாழ்வின் சம்பவங்களாகவே இருக்கும். நீங்கள் விழித்த 5 நிமிடங்களில் பாதி கனவை மறந்து விடுகிறீர்கள். 10 நிமிடங்களில் 90 சதவீதம் கனவு மறந்துவிடும், மீதமுள்ளது மட்டுமே ஞாபகத்தில் இருக்கும்.

நவீன விஞ்ஞான வளர்ச்சியால் இன்னும் சில காலங்களில் நமது கனவுகளை பதிந்து வைக்க கூடிய தொழில்நுட்பம் வரலாம் என கூறப்படுகிறது. ஒருவர் கனவிற்குள் சென்று அவர் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளக்கூடிய காலம் வெகு தொலைவில் இல்லை என்றே கூறலாம்.

பொதுவாக எல்லாக் கனவுகளுக்கும் பலன் உண்டு என்று சொல்லிவிட முடியாது. ஆனால் குறிப்பிட்ட சில நேரங்களில், நாம் ஆழ்ந்த உறக்க நிலையில் இருக்கும்போது வரும் கனவுகளுக்கு நிச்சயம் பலன் உண்டு என்று கூறுகின்றனர் கனவை பற்றி ஆராய்ந்து வரும் ஆராய்ச்சியாளர்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button