கள்ளக்குறிச்சிகிரைம்தமிழ்நாடு

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி – உளுந்தூர்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே செஞ்சி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளி. இவரது மகன் ஆனந்தன் (40) ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். ஆனந்தனுக்கு மனைவி சத்தியா (35), அனுஷா, மகர ஜோதி என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில், மது போதையில் இருந்த ஆனந்தன் சுயநினைவு இல்லாமல் கிராமத்து எல்லையில் உள்ள ஆற்றங்கரையில் கிடந்துள்ளார். செஞ்சிகுப்பம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ஆற்றங்கரை சென்றபோது, ஆனந்தன் மதுபோதையில் கிடந்ததை பார்த்துள்ளனர். பின்னர் அவரை தூக்கிக்கொண்டு வீட்டில் சேர்த்துள்ளனர்.

வீட்டில் இருந்த ஆனந்தனின் வாயில் திடீரென நுரை தள்ளி சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக துடிதுடித்து இறந்தார்.  இதுகுறித்து சந்தேகம் அடைந்த கிராம மக்கள், திருநாவலூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் ஆனந்தன் குடித்த மதுபாட்டில்ளை சோதனை செய்தபோது, ஒரு மது பாட்டிலில் மட்டும் விஷம் கலந்த மருந்து வாடை அடிப்பது தெரிய வந்தது. ஆனந்தன் இறப்பில் சந்தேகம் இருப்பதால், திருநாவலூர் காவல் ஆய்வாளர் பொறுப்பு தேவிகா தலைமையில் உதவி ஆய்வாளர் அகிலன் மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனையடுத்து ஆனந்தன் மரணம் தொடர்பாக, அவரது மனைவி சத்தியாவிடம் விசாரணை மேற்கொண்ட போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அவர் கொடுத்த வாக்குமூலத்தில், திருமணத்திற்கு முன்பே பண்ருட்டி தாலுகா விசூர் கிராமத்தைச் சேர்ந்த எனது தாய் மாமன் சீனுவாசனுடன் (35) நெருங்கி பழகியதாக தெரிவித்தார். பெற்றோர் கட்டாயப்படுத்தியதால், ஆனந்தனை திருமணம் செய்து கொண்டதாகவும், கணவர் ஓட்டுநர் வேலைக்காக வெளியூர் சென்றபோது, தாய் மாமன் சீனுவாசனை வீட்டிற்கு வரவைத்து இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததாக சத்தியா கூறினார்.

தங்களது கள்ளக்காதல் எனது கணவருக்கு தெரிய வந்ததால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. எனவே கணவரை கொலை செய்ய நானும் எனது கள்ளக்காதலனும் திட்டம் தீட்டினோம். அதன்படி மதுவில் பூச்சி மருந்து கலந்து கணவருக்கு கொடுத்தோம். அவர் சுயநினைவு இல்லாமல் போனதால், அங்கிருந்து நாங்கள் தப்பியோடி விட்டோம் என சத்தியா வாக்குமூலம் அளித்தார்.  இதனையடுத்து, மனைவி சத்தியா மற்றும் கள்ளக்காதலன் ஆகியோரை கொலை வழக்கில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button