ஈரோடுகிரைம்தமிழ்நாடு

ஆட்டைத் திருட முதியவரை கட்டிப்போட்டு கொலை செய்த இளைஞர்கள் – பவானியில் பரபரப்பு

ஈரோடு மாவட்டம் பவானி அருகே பெருமாள் பாளையம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவர் அதே பகுதியில் உள்ள மலை கரட்டில் ஆடுகளை மேய்த்து வருகிறார். இந்நிலையில், முதியவர் வழக்கம்போல் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர். பின்னர் போதை தலைக்கேறியதும், முதியவர் முனுசாமியின் கை, கால்கள் மற்றும் வாய், மூக்கினை இறுக்கமாக கட்டியுள்ளனர். இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கிராம மக்கள் புகார் அளித்ததின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு போலீசார், முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை சோதனை மேற்கொண்டனர்.

அந்த வீடியோவில், மது போதையில் இருந்த மூன்று இளைஞர்கள், முதியவரை கட்டிப்போட்டு ஆட்டைத் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.  இதனையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் 3 தனிப்படை அமைத்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்தன.

இந்தநிலையில், முதியவர் கொலை தொடர்பாக, சேர்வராயன் பாளையத்தை சேர்ந்த ஜானகிராமன், சுதாகரன் மற்றும் குமராபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து திருடிய ஆட்டையும், தப்பிச்சென்ற வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன. 3 இளைஞர்களையும் குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button