கவர் ஸ்டோரிசென்னைதமிழ்நாடு

13 மாணவர்கள் தற்கொலைக்கு தி.மு.க. தான் காரணம் – சட்டசபையில் முதல்வர் பழனிசாமி ஆவேசம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டசபை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று தொடங்கியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏக்கள் முக கவசம் அணிந்து சட்டசபை கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து இந்த ஆண்டு மரணம் அடைந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு கூட்டத்தொடரில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வசந்தகுமார் எம்பி உள்ளிட்டோர் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சட்டசபை கூட்டத்தை சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார்.

இந்தநிலையில், 3 நாட்கள் மட்டுமே நடக்கும் சட்டசபையின் 2வது நாள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அப்போது, நீட் தேர்வு தொடர்பாக சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இதுவரை மத்திய அரசிடம் ஒப்புதல் வாங்கவில்லை என்றார்.

தற்போது நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும்,  நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும், கருணாநிதி முதல்வராக இருந்த வரை தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்படவில்லை என மு.க.ஸ்டாலின் கூறினார்.

அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்த போதுதான் நீட் தேர்வுக்கான சட்டம் கொண்டு வரப்பட்டது எனக் கூறினார். 2010ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டம் காரணமாக, தற்போது நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வு பயத்தால் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு திமுக தான் காரணம் என என முதலமைமச்சர் ஆவேசமாக பேசினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button