கிரைம்சினிமாதமிழ்நாடு

நடிகர் சூர்யா, ஜோதிகா, சிவக்குமார் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

நீட் தேர்வு குறித்த பயத்தால் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், கொரோனா பரவல் அச்சத்தால் உயிருக்கு பயந்து காணொளி காட்சி மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், நீட் மாணவர்களை மட்டும் மையங்களுக்கு சென்று தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதாக கூறியிருந்தார்.

சூர்யாவின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்தும் நிலையில்,  பாஜகவினரும், நீட் தேர்வுக்கு ஆதரவாக பேசுவோரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே சூர்யா ரசிகர்களும், நீட் தேர்வை ரத்து செய்ய குரல் கொடுப்போரும் #TNStandWithSuriya என்ற ஹேஷ்டேக் மூலமாக ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சூர்யா, ஜோதிகா, சிவக்குமார் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகளை அவதூறாக பேசியதாக நடிகர் சூர்யா, ஜோதிகா, சிவக்குமார் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் புகார் அளித்துள்ளனர்.

நீட் மாணவர்களின் தற்கொலை குறித்த சூர்யாவின் கருத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என  தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு  முன்னாள் நீதிபதிகளான கே.சந்துரு, கே.என்.பாட்ஷா, சுதந்திரம், அரிபரந்தாமன், கே.கண்ணன், ஜி.எம்.அக்பர் அலி ஆகிய 6 பேர் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button