அரசியல்சினிமாசேலம்

நீட் தேர்வை மாணவர்கள் சந்தித்து தான் ஆக வேண்டும் – பிரபல நடிகை பரபரப்பு பேட்டி

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள வேலகவுண்டனூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில தலைவரும் நடிகருமான காயத்ரிரகுராம் கலந்துகொண்டார். அப்போது பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 20க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காயத்ரி ரகுராம், நீட் தேர்வு குறித்த மாணவர்களின் தற்கொலைகள் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை என்றார்.  ஆனால் தமிழகத்தில் மட்டுமே தேர்வு அச்சம் காரணமாக தற்கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது நடந்து முடிந்த நீட் தேர்வு மிகவும் எளிமையாக உள்ளது என மாணவர்கள் கூறுகின்றனர். திமுக உள்ளிட்ட கட்சிகள் மாணவர்களுக்கு நீட் தேர்வு குறித்து தைரியம் கொடுக்க வேண்டுமே தவிர பயத்தை உண்டு பண்ணக்கூடாது.

மேலும், நீட் தேர்வு விவகாரத்தை அரசியலாக எடுத்துக்கொண்டு திமுக பொய்ப்பிரசாரங்கள் செய்து வருவதுடன், மாணவர்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கும் வகையில் நடந்து கொண்டு வருகிறது. மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு என்பது கடைசி வரை மாணவர்கள் சந்தித்து தான் தீரவேண்டும் என காயத்ரி ரகுராம் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button