அரசியல்இந்தியாகவர் ஸ்டோரிடெல்லி

மயில்களின் மேல் நாட்டம் சென்றதால் நாட்டு மக்கள் மீது பிரதமர் மோடிக்கு அக்கறை இல்லை

மனித குலத்திற்கு சவாலாக விளங்கும் கொரோனா வைரஸ் தொற்று 200 நாடுகளுக்கு மேலாக பரவியுள்ளது. கொரோனாவுக்கு குறிப்பிட்ட தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், நோய் தொற்றால் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகளின் உயிரை காக்கும் மருந்தை பயன்படுத்துவது குறித்து பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. மேலும் கொரோனாவுக்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ நிபுணர்கள் முயன்று வருகின்றனர்.

இதனிடையே, இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனமும் இணைந்து கொரோனாவுக்கான தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், மூன்றாம் கட்ட பரிசோதனையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில், மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து மக்கள் பலர் கலந்துகொண்டனர்.

கொரோனா தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்ட பலருக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், விவரிக்க முடியாத அளவிற்கான உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பரிசோதனை நிறுத்தி வைக்கப்பட்டதாக ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதற்கு பாஜக அரசே காரணம் என ராகுல்காந்தி குற்றச்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ள செய்தியில், பிரதமர் நரேந்திர மோடி மயில்களுடன் விளையாடிக் கொண்டிருப்பதால், கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும் என ராகுல் காந்தி மறைமுகமாக தாக்கியுள்ளார்.

மேலும், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 லட்சத்தைக் தாண்ட உள்ளதாகவும், 10 லட்சம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். தனிநபரின் ஆணவத்தால், நாட்டில் திட்டமிடப்படாத ஊரடங்கு அமல் படுத்தப்பட்டதாகவும், இதனால்  கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவி இருப்பதாகவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button