கிரைம்தமிழ்நாடுநாகப்பட்டினம்

உல்லாசத்திற்கு தடையாக இருந்த குழந்தை அடித்துக் கொலை – தாய் கண் முன்னே கள்ளக்காதலன் வெறிச்செயல்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த எழிலரசி (28) – மகேந்திரன் தம்பதியருக்கு 5 வயதில் ஒரு மகனும், 3 வயதில் மனுஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். மகேந்திரன் இறந்து விட்டதால், தனிமையில் இருந்துள்ளார் எழிலரசி. குடும்பத்தில் வறுமை வாட்டி வதைத்த நிலையில், ஹலோ ஆப்’ என்ற இணையத்தின் மூலம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசமர தெரு பகுதியை சேர்ந்த ராமதாசுடன் (30) பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது.

கடந்த ஒரு வருடமாக ராமதாஸ் – எழிலரசியும் நெருங்கி பழகி வந்துள்ள நிலையில், இருவரும் அடிக்கடி வேளாங்கண்ணியில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதேபோன்று கடந்த 10 ஆம் தேதி வழக்கம் போல் கள்ளக்காதலனை காண தனது 3 வயது குழந்தையுடன் வேளாங்கண்ணிக்கு சென்றுள்ளார் எழிலரசி. சம்பவத்தன்றும் இவர்கள் உல்லாசமாக இருந்துள்ளனர்.

அப்போது மகள் மனுஸ்ரீ திடீரென அழுததால், ஆத்திரமடைந்த ராமதாஸ், தாய் கண் முன்னே சரமாரி தாக்கியதில் குழந்தை மயக்கம் அடைந்துள்ளது. இதனையடுத்து, நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்த போது, குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பின்னர் இறந்த குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு ராமதாசும், தாய் எழிலரசியும் மாயமாகினர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தநிலையில், வேளாங்கண்ணி ஆர்ச் அருகே குழந்தையை விட்டுச்சென்ற இரண்டு பேரும் நின்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ராமதாஸ் – எழிலரசியை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பின்னர் வேளாங்கண்ணி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. உல்லாசமாக இருப்பதற்கு தடையாக இருந்த 3 வயது குழந்தையை, தாய் கண் முன்னே கள்ளக்காதலன் அடித்து கொலை செய்த சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button