கிரைம்தமிழ்நாடுமதுரை

இயற்கை உபாதை கழிக்க சென்ற இளம்பெண் படுகொலை – 20 இடங்களில் கத்தி குத்து

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி அருகே V. அம்மாபட்டி கிராமத்தை சேர்ந்த தவிடன் – முத்துலட்சுமி தம்பதியிரின் மூன்றாவது மகள் ஜெயசக்தி பாலா (18). இவருக்கும், விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகே மத்திய சேணை கிராமத்தைச் சேர்ந்த தங்கப்பாண்டியன் மகன் முத்துப்பாண்டிக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

ஆனால், ஜெயசக்தி பாலாவிற்கு 18 வயது நிரம்பவில்லை என விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலைத்தில் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து, மணமக்களை அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 18 வயது பூர்த்தி ஆகும் வரை இருவரும் பிரிந்திருக்க வேண்டுமென அறிவுறுத்தியதன் பேரில், ஜெயசக்தி பாலா தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் இயற்கை உபாதை கழிக்க செல்வதாக தந்தையிடம் கூறி விட்டு, வெளியில் சென்ற ஜெயசக்தி பாலா வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். இதனிடையே கண்மாய்க்குள் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக டி.கல்லுப்பட்டி போலீசாருக்கு கிராம மக்கள் தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து வந்த பேரையூர் சரக டி எஸ்பி மதியழகன் தலைமையிலான போலீசார் இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது 20 இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருப்பதும், இந்த பெண் காணாமல் போன தவிடன் மகள் ஜெய்சக்தி பாலா என்பதும் தெரியவந்தது.

இதனை அடுத்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, போலீசார் சோதனை மேற்கொண்டனர். பின்னர் இறந்த பெண்ணின் செல்போனை வைத்து விசாரணை நடத்தியதில், கொலை செய்வதற்கு முன்பு கணவர் முத்துக்குமாருடன் பேசியிருப்பது தெரிய வந்தது. அவரிடம் துருவி துருவி விசாரித்த போது, மனைவி ஜெயசக்தி பாலாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். கொலைக்கு உடந்தையாக இருந்த அருண்குமார், ஹரிஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தநிலையில் முத்துக்குமார் அளித்த வாக்குமூலத்தில், இதே பகுதியில் வசிக்கும் 10 வகுப்பு மாணவியுடன் தான் நெருங்கி பழகி வந்ததாக கூறியுள்ளார். இதனை அறிந்த மனைவி ஜெயசக்தி பாலா கண்டித்தால், தங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், மனைவி பற்றி அவரது கிராமத்து இளைஞர்கள் தவறாக பேசியதால் ஆத்திரமடைந்து மனைவி ஜெயசக்தி பாலாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன் என்று அவர் கூறியுள்ளார்.

அதன்படி உறவினர்கள் அருண்குமார், ஹரிஷ் ஆகிய இருவரையும் அழைத்தேன். இரவில் இயற்கை உபாதையை கழிக்க சென்றபோது, ஜெயசக்தி பாலாவை கத்தியால் சரமாரி குத்தி 3 பேரும் கொலை செய்தோம். பின்னர் அனைவரும் தப்பியோடி விட்டதாக முத்துக்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button