இந்தியாகவர் ஸ்டோரி

வங்கியில் வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம் திடீர் குறைப்பு – வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ. எனப்படும் பாரத ஸ்டேட் வங்கிகளில் வைத்திருக்கும் வைப்புத் தொகைக்கான (Fixed deposit)  வட்டி குறைப்பு செய்துள்ளது. இந்த வட்டி குறைப்பானது செப்டம்பர் 10 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 7  நாட்கள் தொடங்கி ஒரு ஆண்டுக்குள்ளான வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.

வங்கி வைப்பு நிதிக்களுக்கான வட்டி விகிதம் குறைந்தாலும், தற்போது நிலவி வரும் நெருக்கடியான சூழ்நிலையில், இது ஒரு கணிசமான வருவாயினைக் கொடுக்கும் பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது.  புதிய டெபாசிட் மற்றும் டெபாசிட் புதுப்பித்தல் ஆகிய நடைமுறைகளுக்கு மட்டுமே வட்டிக் குறைப்பு பொருந்தும் என்றும் எஸ்.பி.ஐ. நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. குறிப்பாக மூத்த குடி மக்களுக்கு கூடுதலாக 50 அடிப்படை புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு ஏதுவான முதலீடாக பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் 10 முதல் அமலுக்கு வரும் வட்டி விகிதம் மாற்றங்கள்

7 முதல் 45 நாட்கள்: 2.90% வட்டி விகிதம்
46 முதல் 179 நாட்கள்: 3.90% வட்டி விகிதம்
180 முதல் 210 நாட்கள்: 4.40% வட்டி விகிதம்
211 நாட்கள் முதல் 1 வருடம் வரை: 4.40% வட்டி விகிதம்
1 முதல் 2 ஆண்டுகள்: 4.90% வட்டி விகிதம்
2 முதல் 3 ஆண்டுகள்: 5.10% வட்டி விகிதம்
3 முதல் 5 ஆண்டுகள்: 5.30% வட்டி விகிதம்
5 முதல் 10 ஆண்டுகள்: 5.40% வட்டி விகிதம்

மூத்த குடிமக்களுக்கான எஃப்.டி வட்டி விகிதங்கள்

7 முதல் 45 நாட்கள்: 3.40% வட்டி விகிதம்
46 முதல் 179 நாட்கள்: 4.40% வட்டி விகிதம்
180 முதல் 210 நாட்கள்: 4.90% வட்டி விகிதம்
211 நாட்கள் முதல் 1 வருடம் வரை: 4.90% வட்டி விகிதம்
1 முதல் 2 ஆண்டுகள்: 5.40% வட்டி விகிதம்
2 முதல் 3 ஆண்டுகள்: 5.60% வட்டி விகிதம்
3 முதல் 5 ஆண்டுகள்: 5.80% வட்டி விகிதம்
5 முதல் 10 ஆண்டுகள்: 6.20% வட்டி விகிதம்

வங்கி மூத்த குடிமக்களுக்காக எஃப்.டி தயாரிப்பு ‘எஸ்.பி.ஐ. வி கேர் டெபாசிட்’ ஒன்றை அறிமுகப்படுத்தியது. இதில், மூத்த குடிமக்கள் 5 வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு சில்லறை கால வைப்புத்தொகைகளில் 30 அடிப்படை புள்ளிகளின் கூடுதல் பிரீமியத்தைப் பெறுவார்கள். மேலும், எஸ்பிஐ விகேர் வைப்புத் திட்டம் 2020 டிசம்பர் 31 வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button