சினிமாசென்னைதமிழ்நாடுவைரல்

நடிகர் சூர்யாவின் கருத்துக்கு நீதிபதிகள் ஆதரவு – உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி குழப்பம்

நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம், அக்டோபர் 30-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை வெளியிடுவதன் மூலம் பெறப்படும் நிதியில் இருந்து ரூ.5 கோடியை, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் வழங்குவதாக நடிகர் சூர்யா அறிவித்திருந்தார். மேலும், இவருடைய குடும்ப பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.10,000 கல்வி ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் கொரோனா காலக்கல்வி உதவிக்கோரி, இதுவரை 3,000 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக, தனது டுவிட்டர் பக்கத்தில் சூர்யா பதிவிட்டுள்ளார். ஒருவர் படித்தால் அந்த வீடு மாறும் என்றும், ஒவ்வொருவரும் படித்தால் அந்த நாடே மாறும் எனவும் கூறியுள்ள அவர், பொருளாதார நெருக்கடியால் பல மாணவர்கள் தங்களது கல்வியைக் கைவிட்டுள்ளதால், நாம் நினைத்தால் மாற்ற முடியும் எனவும் சூர்யா தெரிவித்துள்ளார்.

இதுனிடையே, நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக நடிகர் சூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், கொரோனா பரவல் அச்சத்தால் உயிருக்கு பயந்து காணொளி காட்சி மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், நீட் மாணவர்களை மட்டும் மையங்களுக்கு சென்று தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதாக கூறியிருந்தார். சூர்யாவின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்தனர்.

நடிகர் சூர்யாவின் கருத்து நீதிபதிகள் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நேர்மை மற்றும் சிரத்தையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது எனவே அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு  முன்னாள் நீதிபதிகளான கே.சந்துரு, கே.என்.பாட்ஷா, சுதந்திரம், அரிபரந்தாமன், கே.கண்ணன், ஜி.எம்.அக்பர் அலி ஆகிய 6 பேர் கடிதம் எழுதியுள்ளனர். மேலும், 3 மாணவர்கள் தற்கொலை குறித்த சூர்யாவின் கருத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும், சூர்யாவின் அறக்கட்டளை மூலம் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயனடைந்துள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button