தமிழ்நாடுவானிலை

வேலூர் உள்பட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – மீனவர்களுக்கு சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடல் பகுதியில் நிலவிய மேலடுக்கு சுழற்சியானது தற்பொழுது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி அதே இடத்தில் நீடிக்கின்றது.

இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோவை , நீலகிரி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button