அரசியல்தமிழ்நாடுமதுரை

ஐ லவ்யூ அம்மா, சாரி அப்பா – ஜோதி ஸ்ரீ துர்காவின் கடைசி வார்த்தைகள்!

நீட் தேர்வுக்கு இன்னொரு உயிரை பறிகொடுத்திருக்கிறது தமிழ்நாடு. அனிதா, ரித்து, வைஷியா, சுபஸ்ரீ, விக்னேஷ் என அடுத்தடுத்த தற்கொலைகள் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள், தனது இன்னுயிரை இழந்து, பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் மாணவி ஜோதி, ஸ்ரீ துர்கா.

மதுரை தல்லாகுளம் 6ஆம் பட்டாலியன் காவல்குடியிருப்பில் வசித்துவந்த சப்- இன்ஸ்பெக்டர் முருகசுந்தரம் என்பவரின் மகள் தான் ஜோதி துர்கா. அரசு பள்ளியில் படித்துவந்த அவர், 12ஆம் வகுப்பு முடித்து, கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்துள்ளார். இதனையடுத்து இந்த ஆண்டு நிச்சயமாக தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் தனியார் பயிற்சி மையத்தில் பயின்றுள்ளார்.

நாளை நடைபெறவுள்ள இந்த ஆண்டிற்கான நீட் தேர்விற்காக இரவு முழுவதிலும் படித்துகொண்டிருந்தபோது, வீட்டில் உள்ளே அறையில் மாணவியின் குடும்பத்தினர் உறங்கிகொண்டிருந்தபோது தான் வெளியில் அமர்ந்து படிப்பதாக கூறியதோடு நேற்று இரவு தனது தந்தையிடம் தேர்வு குறித்து அச்சமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து 7பக்க அளவிற்கு கடிதம் எழுதியதோடு , வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் உருக்கமாக பேசியுள்ளதாவது,
நா நல்லா தான் படிச்சேன் ஆனா பயமா இருக்கு. நான் ஒரு வேளை பெயில் ஆயிட்டேனா… பெயில் ஆக மாட்டேன் ஆனா பயமா இருக்கு… ஒரு வேளை சீட் கிடைக்கலைனா. நீங்க எல்லா ஏமாந்திருவீங்க. சாரி அப்பா.. சாரி அம்மா. டாட்டா… ஸ்ரீ தர் இருக்கான். ஸ்ரீ தரை நல்லா பாத்துக்கோங்க.. அவன் நீங்க சேட் இருக்க கூடாது. ஸ்ரீ தர நல்லா பாத்துக்கோங்க… நீங்க சேட இருந்தா அவன் பியூச்சர யாரு பார்ப்பா. பாய் ஸ்ரீ தர். ஐ எம் சாரி. ஐ லவ்யூ அம்மா. சாரி அப்பா. உங்க ஹெல்த நல்லா பாத்துக்கோங்க… என்னை பத்தி ரொம்ப கவலைப்படாதீங்க. ஐயம் சாரி… இவ்வாறு பேசியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button