சினிமாசென்னைதமிழ்நாடுஹெல்த்

பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை – எஸ்.பி.பி.சரண் விளக்கம்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த மாதம் 5 ஆம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், எஸ்.பி.பி.யின் உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. அவருக்கு கொரோனா தொற்று நுரையீரலை கடுமையாக தாக்கி செயலிலக்கும் நிலைக்கு சென்றதால், கடந்த ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதியில் இருந்து செயற்கை சுவாசமும், எக்மோ சிகிச்சையும் கொடுக்கப்பட்டு வந்தது.

பாகடர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மீண்டு வரவேண்டும் என திரையுலக நண்பர்களும், ரசிகர்களும் அவருக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதன் எதிரொலியாக அவர் தற்போது கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார். எஸ்.பி.பி.யின் நடவடிக்கைகளை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்தநிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்பிபிக்கு எக்மோ கருவி மூலம் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படவிருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், தனது தந்தை குறித்து ஊடகங்களில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என எஸ்.பி.பியின் மகன் எஸ்பி சரண் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை சீராக உள்ளது. மெதுவாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. தந்தையை தினமும் பார்த்து வருகிறேன். அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை என வெளியான தகவல் தவறு என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button