கவர் ஸ்டோரிசென்னைதமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு – கடலூர் மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரவி. இவரது தந்தை கிராம உதவியாளராக பணியில்
இருந்தபோது, 2003 ஆம் ஆண்டு மரணமடைந்தார். இதையடுத்து கருணை அடிப்படையில் வாரிசு வேலை கேட்டு 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி ரவி அரசுக்கு விண்ணப்பம் கொடுத்துள்ளார். இந்த மனுவை உயர் அதிகாரிக்கு திட்டக்குடி தாசில்தார்
பரிந்துரைத்துள்ளார். இதன் பின்னரும் தனக்கு வேலை கிடைக்காததால், முதல்வர் தனிப்பிரிவுக்கு அவர் மனு அனுப்பினார்.

ஆனால், தந்தை இறந்து 3 ஆண்டுக்குள் வாரிசு வேலைக் கேட்டு விண்ணப்பம் செய்யவில்லை. அரசு வழங்கிய 3 மாத கால அவகாசத்துக்குள் விண்ணப்பம் செய்யவில்லை என்று காரணம் கூறி, வாரிசு வேலை வழங்க மறுத்து தமிழக அரசு கடந்த 2011ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ரவி, தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 2011ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரணை மேற்கொண்டார்.

இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு சில அரசு பணிகளுக்கு 2001 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை தடை விதித்திருந்தது. பின்னர் இந்த தடை 2007ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி நீக்கப்பட்டு, கருணை அடிப்படையில் விண்ணப்பம் செய்ய 3 மாதம் கால அவகாசம் வழங்கியது. இந்த 3 மாத கால அவகாசத்துக்குள் மனுதாரர் வாரிசு கேட்டு விண்ணப்பம் கொடுக்கவில்லை என்று அரசு தரப்பில் கூறுவதை ஏற்க முடியாது.

மனுதாரர் வேலைக் கேட்டு 2005 ஆம் ஆண்டே விண்ணப்பம் கொடுத்துள்ளார். அப்போது, அரசு பணி நியமனத்துக்குத்தான் தடை இருந்ததே தவிர, வாரிசு வேலை கேட்டு விண்ணப்பம் செய்ய தடை எதுவும் இல்லை. எனவே, வாரிசு வேலை வழங்க மறுத்து 2011ஆம் ஆண்டு பிறப்பித்த அரசு உத்தரவை ரத்து செய்யப்படுகிறது.

மேலும், மனுதாரர் ரவிக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திர சேகர் சகாமுரி, வருகிற டிசம்பர் மாதத்திற்குள் அரசு பணி வழங்கவேண்டும். அவ்வாறு வழங்கவில்லை என்றால், 2021 ஜனவரி 1 ஆம் தேதி முதல் ரவி அரசு ஊழியராக கருதப்பட்டு, கடைநிலை ஊழியரின் ஊதியத்தை வழங்கவேண்டும். இந்த ஊதியத்தை, மாவட்ட ஆட்சியரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யவேண்டும்.  மனுதாரருக்கு வாரிசு வேலை டிசம்பர் மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

Related Articles

3 Comments

  1. Unless these directions the Govt .officials doesn’t OBEY the court directions.
    They never respect court verdicts they think they are above law that is why this much
    punishments for non obedience of court directions given.
    The grudge of the collector now is he has not been GIVEN THE FREEDOM to dodge the court verdict
    but he has to ACT.

  2. There is no other way for the Government. They have to issue the job since it is purely on mercy grounds. For this they require court order?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button