அரசியல்அரியலூர்தமிழ்நாடு

நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட விக்னேஷின் பெற்றோரை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருடைய மகன் விக்னேஷ் (19) நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு எழுத இருந்த நிலையில், கடந்த 9 ஆம் தேதி திடீரென கிணற்றில் குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டார். மாணவனின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், விக்னேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்த, தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எலந்தங்குழி கிராமத்திற்கு வந்தார். அவரை அரியலூர் மாவட்ட போலீசார் பாதுகாப்புடன், உயிரிழந்த விக்னேஷின் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு விக்னேசின் பெற்றோரை, உதயநிதி ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் விக்னேசின் குடும்பத்தினருக்கு, கட்சியின் சார்பில் ரூ.5 லட்சம் நிதி உதவியாக வழங்கினார்.

இதற்கிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த விக்னேசின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் எலந்தங்குழி கிராமத்திற்கு சென்று மாணவரின் உறவினர்களை சந்திக்க திருமாவளவனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், விக்னேஷின் பெரியப்பா மகன் சக்திவேலுக்கு ஆறுதல் கூறிவிட்டு நிதியுதவியாக ரூ.25 வழங்கினார்.

நீட்  தேர்வு குறித்த மன உளைச்சலால் தற்கொலை கொண்ட மாணவர் விக்னேஷின் குடும்பத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button