ஆந்திராகிரைம்

1 வயது தங்கையை தண்ணீர் தொட்டியில் தூக்கி போட்டு கொலை செய்த 5 வயது அக்கா

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள துர்கஷாசனம் கிராமத்தை சேர்ந்தவர் காவியா. இவருக்கு நிர்மலா (5 ) ஹேமஸ்ரீ (1) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டாவது மகள் ஹேமஸ்ரீ பிறந்தது முதல் அவள் மீது பெற்றோர் அதிக பாசத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது.  கடந்த இரண்டு நாட்களுக்கு முன், பக்கத்து வீட்டில் இருந்த குழந்தை ஹேமஸ்ரீ திடீரென்று காணவில்லை. பல்வேறு இடங்களிலும் தேடி பார்த்த நிலையில், வீட்டின் மேல்மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து குழந்தை சடலமாக  மீட்கப்பட்டார்.

தகவல் அறிந்து வந்த போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வந்தனர். குடும்பத்தில் அனைவரிடம் விசாரணை நடத்திய நிலையில், ஹேமஸ்ரீயின் அக்கா
நிர்மலா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவளிடம் போலீசார் விசாரணை தொடங்கினர்.

அப்போது, தங்கை பிறந்தது முதல் அவள் மீது பெற்றோர் அதிக பாசத்துடன் இருந்தனர்.
எனவே தங்கையை தண்ணீர் தொட்டியில் போட்டு விட்டேன் என்று அக்கா நிர்மலா அப்பாவியாக கூறினாள். மகள் நிர்மலா கூறியதை கேட்டு பெற்றோர் மட்டுமல்ல போலீசாரும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர். நிர்மலா மீது கொலை வழக்கு பதிவு செய்து அவளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முடிவில் போலீசார் உள்ளனர். 5 வயது சிறுமி, தங்கையை தண்ணீர் தொட்டியில் போட்டு கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button