அரசியல்சினிமா

பிரபல சர்ச்சை நடிகையின் மும்பை அலுவலகம் திடீர் இடிப்பு – மாநகராட்சிக்கு கடும் எதிர்ப்பு

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்தின் காதலியான நடிகை ரியா சக்ரபோர்த்தி பணம் மற்றும் பட வாய்ப்புகளுக்கு ஆசைப்பட்டு, அதிக டோஸ் உள்ள மருந்துகளை கொடுத்ததுடன், தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டது.

பாலிவுட் நடிகா் சுஷாந்த் சிங் மரணத்தை அடுத்து மும்பை ஒரு பாதுகாப்பற்ற நகரமாக உணருவதாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கூறியிருந்தார். மும்பை பாதுகாப்பற்ற நகரம் என்று கூறியுள்ளதால் இனி கங்கனா மும்பைக்கு வரக் கூடாது என்று சிவசேனை கட்சி தெரிவித்தது. ஆனால், நிச்சயமாக மும்பைக்கு வருவேன். முடிந்தால் என்னை தடுத்துப் பாருங்கள்’ என்று கங்கனா சவால் விடுத்தாா். இதனால் அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால், ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், நடிகை கங்கனா அத்தியாவசிய தேவைக்காக இல்லாமல், மும்பை வந்தால் அவருக்கு எந்த விலக்கும் அளிக்கப்படாது என்றும் மாநகராட்சி திட்டவட்டமாக தெரிவித்தது.

மும்பை வரும் என்னை முடிந்தால் தடுத்து நிறுத்துங்கள் என சிவசேனா கட்சிக்கு சவால் விடுத்த நடிகை கங்கனா ரணாவத் குறித்து நெட்டிசன்கள் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். அதில், கங்கணம் கட்டும் கங்கனா: மல்லுக்கட்டும் மும்பை என பதவிட்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் மத்திய அரசின் ஒய் பிளஸ் பாதுகாப்புடன் மும்பைக்கு நேற்று வந்தார். அவருக்கு துப்பாக்கியுடன் கூடிய 10 சிஆா்பிஎஃப் கமாண்டோ வீரா்கள், 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு அளித்தனர் .இத்தகைய பாதுகாப்பைப் பெறும் முதல் பாலிவுட் பிரபலம் கங்கனா தான்.

இதனிடையே, மும்பையில் உள்ள கங்கனா ரணாவத்தின் அலுவலகம் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக கூறி கட்டிடத்தின் ஒரு பகுதியை மும்பை மாநகராட்சி இடித்து தள்ளியது. இதற்கு  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று முதலில் தனது அதிருப்தியை தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், மும்பையில் ஏராளமான சட்டவிரோத கட்டமைப்புகள் உள்ளன. தேவையில்லாமல் இந்த நடவடிக்கை எடுத்ததன் மூலம், மக்கள் கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பாக மாநகராட்சி நிர்வாகம் அமைத்து கொடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button