அரசியல்சினிமாதமிழ்நாடுதிருச்சி

நடிகர் சிவகார்த்திகேயன் பாஜகவில் இணைய பிரபல தமிழ் நடிகை அழைப்பு

2021 தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்கள் உள்ளதால், தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக கூட்டணி குறித்து மறைமுகமாக ஆலோசித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்ற நோக்கில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக தொண்டர்களை இணைத்து கொண்டு வருகின்றனர். தற்போது உள்ள சூழ்நிலையில், கூட்டணி கட்சியான அதிமுகவுடன் கைக்கோர்க்குமா? என்பது கேள்வியாக உள்ளது.  அதே சமயம் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் பட்சத்தில், அவர் பாஜகவுடன் கூட்டணி அமைப்பாரா? அல்லது தனித்து போட்டியிடுவரா? என்பதும் புரியாத புதிராக உள்ளது.

இந்நிலையில் தமிழக பாஜக கலை, கலாச்சார பிரிவின் மாநிலத் தலைவரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் பாஜக தான் ஆட்சி அமைக்கும். அது எப்படி என்பது விரைவில் தெரியும் என தெரிவித்துள்ளார். மக்கள் ஆதரவு பாஜகவின் பக்கம் திரும்பும் என்று கூறியுள்ள காயத்ரி ரகுராம், இனி வரும் காலங்களில் தாமரை தான் ஆட்சியில் அமரும் என்றார். நடிகர் சிவகார்த்திகேயன் விருப்பம் இருந்தால் பாஜகவில் இணையலாம் என்றும் காயத்ரி ரகுராம் அழைப்பு விடுத்தார்.

தமிழகத்தில் இந்தி தெரியாது போடா என்ற வாசகம் டிரண்ட் ஆகி வருகிறதே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த காயத்ரி, இளைஞர்கள் வளரக்கூடாது என்று அப்படி செய்கின்றனர். பாஜகவை பொறுத்த வரை இளைஞர்கள் நன்கு வளர வேண்டும் என்பதே எங்கள் பிரதான நோக்கம். கடவுள் மொழி தமிழ் என்றால், இந்தி நட்பு மொழி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

அதிமுக ஆட்சியில் தமிழ் கடவுளை பெரிய அளவில் இழிவுப்படுத்தி உள்ளனர். தமிழ் மக்கள் பொறுத்து கொள்ளாமல் அதற்கு பெரிய அளவில் எதிர்ப்பினை தெரிவித்து உள்ளனர். இது கண்டிப்பாக வருகின்ற தேர்தலில் எதிரொலிக்கும் என காயத்திரி ராகும் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button