அரசியல்இந்தியாகவர் ஸ்டோரிசினிமா

நடிகை கங்கனா பா.ஜ.க.வில் இணைந்தால் வரவேற்போம் – மத்திய அமைச்சர் அதிரடி

பாலிவுட் நடிகா் சுஷாந்த் சிங் மரணத்தை அடுத்து மும்பை ஒரு பாதுகாப்பற்ற நகரமாக உணருவதாக பிரபல நடிகை கங்கனா ரணாவத் கூறியிருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த சிவசேனை கட்சி, இனி கங்கனா மும்பைக்கு வரக் கூடாது என கூறியது. மும்பைக்கு நிச்சயமாக வருவேன் என கங்கனா சவால் விடுத்தார். அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால், ஒய் பிளஸ் பாதுகாப்பு மத்திய அரசு வழங்கியது.  இத்தகைய பாதுகாப்பைப் பெறும் முதல் பாலிவுட் பிரபலம் கங்கனா தான்.

இதனிடையே, மும்பையில் உள்ள கங்கனா ரணாவத்தின் அலுவலகம் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக கூறி கட்டிடத்தின் ஒரு பகுதியை மும்பை மாநகராட்சி இடித்துள்ளது. இதற்கு  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் முதலில் தனது அதிருப்தியை தெரிவித்தார்.

அலுவலம் இடிப்பதை எதிர்த்து கங்கனா மனுதாக்கல் செய்த நிலையில், வீட்டை இடிக்க மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. மஹாராஷ்டிரா ஆளும் சிவசேனா கட்சி கடும் கொந்தளிப்பில் உள்ள நிலையில், நடிகை கங்கனா ரனாவத்தை இந்திய குடியரசு கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே நேரில் சந்தித்து பேசினார்.

இதுகுறித்து பேசிய ராம்தாஸ் அத்வாலே, நடிகை கங்கனாவிற்கு அரசியலில் விருப்பம் இல்லை எனவும், ஆனால் சமூகத்தித்தின் மீது அவருக்கு அக்கறை இருப்பதாகவும் கூறினார். எனினும், நடிகை கங்கனா ரனாவத் பாஜகவில் அல்லது இந்திய குடியரசு கட்சியில் சேர்ந்தால் வரவேற்போம் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button