கிரைம்தமிழ்நாடுதிருச்சி

திருச்சியில் காதலிப்பதை கைவிட மறுத்த காதலன் – காதலனின் தந்தை குத்திக் கொலை

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் உள்ள சுண்ணாம்பு காரத் தெருவைச் சேர்ந்தவர் பார்த்தீபன். இவரது மகன் ஆகாஷ். இதே பகுதியில் செல்வகுமார் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவரது மகளை, ஆகாஷ் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த செல்வகுமார், தனது நண்பர் பாம்பு நாகராஜூடன் சென்று காதலன் ஆகாஷ் தந்தையிடம் முறையிட்டுள்ளார். மேலும், தனது மகளைக் காதலிப்பதை உன் மகன் கைவிட வேண்டும் என்றும் காதலனின் தந்தையிடம் செல்வகுமார் வலியுறுத்தியுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செல்வகுமார், நண்பருடன் சேர்ந்து பார்த்திபனை கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் சரமாரி குத்தி படுகொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்.

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button