கிரைம்தமிழ்நாடுதிருச்சி

சிறுமியை மிரட்டி காதலன் உள்பட நண்பர்கள் 2 பேர் பாலியல் உறவு – திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே ஈச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி கோவிந்தராஜ். இவரது மனைவி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். இதனையடுத்து, தனது ஒரே ஒரு பெண் குழந்தையை கோவிந்தராஜ் தன்னுடனே வளர்த்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கொணலைப் பகுதியில் உள்ள மலைமாதா தனியார் கிருஸ்தவ பள்ளியில், தனது மகளை சேர்த்துள்ளார். பள்ளிக்கு சொந்தமான விடுதியிலேயே தங்கியுள்ள அவர் தற்போது 10 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.

இதே பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த சமயபுரம் மருதூர் கிராமத்தினைச் சேர்ந்த விஜய் என்ற மருதுபாண்டி, கோவிந்தராஜின் மகளை காதலித்து வந்துள்ளார். இதனிடையே, தனது காதலை பற்றி நண்பர்களான அல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விமல்குமார், லால்குடி பகுதியைச் சேர்ந்த  தினேஷ் ஆகியோரிடம் அவர் கூறியுள்ளார்.

இந்த சூழ்நிலையில், தனது இரு நண்பர்களை உடல் ரீதியாக சந்தோஷப்படுத்தினால் தான் உன்னை திருமணம் செய்து கொள்வேன் என அந்த சிறுமியை மிரட்டியுள்ளார் மருதுபாண்டி. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, காதலன் பேச்சை மீறாமல் சம்மதித்துள்ளார். இதனால் மூன்று பேரும் அந்த சிறுமியுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில்,  சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், அருகில் இருந்த பெண் ஒருவர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். பரிசோதனையில், சிறுமி  7 மாத கர்ப்பிணியாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த தந்தை கோவிந்தராஜ் அதிர்ச்சியடைந்தார். பின்னர் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், காவல்நிலைய ஆய்வாளர் பழனியம்மாள் விசாரணை மேற்கொண்டார்.

காதலியை நண்பர்களுக்கு விருந்து வைத்த காதலன் விஜய் என்ற மருதுபாண்டியினை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள அவரது நண்பர்கள் விமல்குமார், தினேஷ் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 16 வயது சிறுமியை 3 பேர் பாலியல் வன்மம் செய்து 7 மாத கர்ப்பிணி ஆக்கிய சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button