கடலூர்கவர் ஸ்டோரிதமிழ்நாடு

கடலூர் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 5 பேர் பலி

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள நைனார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுசாமி. இவர் தனது குடும்பத்தோடு விருத்தாச்சலம் அருகேயுள்ள கொளஞ்சியப்பர் கோவிலில் மொட்டை அடிப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர். பெரியநெசலூர் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென, இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் நிலைத்தடுமாறி, எதிரே மீன் ஏற்றி வந்த லாரி மீது கார் நேருக்கு நேர் பயங்ரமாக மோதியது. இந்த விபத்தில், வேலுசாமி, அவரது மனைவி ரேவதி மற்றும் அவருடைய மகள் பவானி, பரிமளா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதேபோல் எதிரே வந்த மீன் லாரியின் கிளீனர் லோகநாதனும் விபத்தில் பலியானா. இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் வேப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த அறிவரசன், பிரித்திவி சாய், ரேணுகாதேவி, மணிமேகலை, டிரைவர் தேவா ஆகியோரை மீட்டு,வேப்பூர் மருத்துமனைக்கு போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறையினர் அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர்கள் பெரம்பலூர் மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

10 Comments

 1. Hi there! This is kind of off topic but I need some advice from
  an established blog. Is it hard to set up your own blog?
  I’m not very techincal but I can figure things
  out pretty fast. I’m thinking about making my own but I’m not sure where to begin.
  Do you have any ideas or suggestions? With thanks

  Also visit my website: http://ketosuccess.org/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button