கவர் ஸ்டோரிகிரைம்சென்னைதிருவள்ளூர்

துப்பாக்கியால் சுட்டு சி.ஆர்.பி.எப். துணை கமாண்டர் தற்கொலை – சென்னையில் பரபரப்பு

சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே உள்ள கரையான்சாவடியில் மத்திய ரிசர்வ் படை 77வது பெடாலியன் அமைந்துள்ளது. இங்கு துணை கமாண்டராக பணிபுரிந்து வந்தவர் ஸ்ரீஜன் (50). இவர் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்த ஸ்ரீஜன், தனது அறைக்குச் சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் அறையில் இருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. இதையடுத்து அங்கு பனியில் இருந்த போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது ஸ்ரீஜன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்தார்.

அவரை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர் இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அவரது அலுவலக அறையை சோதனை செய்யும் போது, ஒரு கடிதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை தனது சொந்த பிரச்சினை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். சி.ஆர்.பி.எப். துணை கமாண்டர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button