Uncategorizedகவர் ஸ்டோரிசென்னைதமிழ்நாடுமாவட்டம்வானிலை

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, தர்மபுரி, சேலம், கடலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகள், கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவாலாவில் 18 செ.மீ., ஆலங்குடியில் 12 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button