தமிழ்நாடுமதுரை

முன்னாள் கவுன்சிலர் அரை நிர்வாணமாக நின்று தற்கொலை மிரட்டல் – மதுரையில் பரபரப்பு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டியில் பொது மயானத்தில் உடலை வெட்டியான் சரியாக எரிக்கவில்லை எனக் கூறி அப்பகுதியை சேர்ந்த 9 வார்டு முன்னால் கவுன்சிலர் துரைப்பாண்டியன் பேரூராட்சியிடம் புகார் தெரிவித்திருந்தார். ஆனால், வாடிப்பட்டி பேருராட்சி அதிகாரிகள் புகார் மீது இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த துரைப்பாண்டி, அப்பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி மீது அமர்ந்தும் பின்னர் அரை நிர்வாணமாக நின்று தற்கொலை செய்து கொள்ள போவதாக சுமார் ஒரு மணி நேரம் மிரட்டல் விடுத்தார். உடனடியாக அப்பகுதியில் உள்ள மக்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாடிப்பட்டி தீயணைப்பு துறையினர்,  அவரிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.  மயானத்தில் முறையாக இறந்தவர்களின் உடலை எரியூட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து,  குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து துரைப்பாண்டியை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். தண்ணீர் தொட்டி மீது ஏறி அரை நிர்வாணமாக தற்கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கவுன்சிலரால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button