இந்தியாசெய்திகள்மற்றவை

ரயில்களில் புகைப்பிடிப்பது, பிச்சையெடுப்பது தண்டனைக்குரிய குற்றமல்ல – விதியில் புதிய மாற்றம்?

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை, தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. 2023ஆம் ஆண்டுக்குள் தனியார் ரயில் போக்குவரத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கு பாம்பார்டியர், ஆல்ஸ்டாம், சீமென்ஸ் உள்ளிட்ட 23 நிறுவனங்கள் இதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன. முதற்கட்டமாக 109 வழித்தடங்களில் 150 அதிநவீன ரயில்களை தனியார்களே இயக்கி கொள்வதற்கு அனுமதி வழங்க உள்ளது.

இந்தநிலையில், ரயில்வே சட்டப்பிரிவுகளின்படி, ரயில்களில் பிச்சை எடுத்தல் ஓராண்டு சிறை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். மேலும் ரயில் பயணத்தின் போது புகைப்பிடித்தால் குற்றமாக கருதப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த இரண்டு சட்ட விதிகளிலும் மாற்றங்களை கொண்டு வருவதற்கான புதிய சட்டத்திருத்தத்தினை மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

அதில், ரயில்களில் பிச்சை எடுத்தல் மற்றும் புகைப்பிடித்தல் போன்ற குற்றங்களுக்கு அபராதம் மட்டும் வசூல் செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள் செய்ய மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்மூலம் பிச்சை எடுப்பதையோ, புகைப்பிடிப்பதையோ அரசு ஊக்குவிக்கவில்லை என்றும், மாறாக சிறை தண்டனை வழங்காமல், அபராதம் விதிக்கும் வகையிலான குற்றமாக மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த புதிய சட்டம் தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்கப்படும் என மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button