அரசியல்கவர் ஸ்டோரிதமிழ்நாடு

துப்பாக்கியுடன் பா.ஜ.க. இளைஞரணி தலைவர் – தமிழகத்தில் வன்முறைக் கலாச்சாரம் பரவுகிறதா?

ராமநாதபுரத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பேசிய பாஜக இளைஞர் அணி மாநில தலைவர் வினோஜ் செல்வம், ஹிந்தி படித்தால் தமிழ் அழியாது, தி.மு.க., தான் அழியும் என தெரிவித்திருந்தார். மேலும், கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்திய கருப்பர் கூட்டத்தை ஆதரிக்கும் தி.மு.க.வை விரட்டி அடிக்க வேண்டும் என்றும் அவர் பேசியிருந்தார். தமிழகத்தில் பாஜக பலம் முன்பை விட பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் வினோஜ் செல்வம் கூறியிருந்தார்.

இதனையடுத்து, மதுரை திருப்பாலை பகுதியில் இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வினோஜ் செல்வம் நேற்று பங்கேற்றார்.  இந்தக் கூட்டத்தில் மதுரை புறநகர் மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு தலைவர் சுப்பாக்கி ஒன்றை பரிசளித்தார். இந்தத் துப்பாக்கியை வைத்து வானத்தை நோக்கி ஒரு முறை அவர் சுட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின்போது, தமிழக பாஜகவின் புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், இளைஞர் அணி மாநில நிர்வாகி சங்கரபாண்டி, இளைஞர் அணி மாவட்ட தலைவர் சோலை மணிகண்டன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.  பா.ஜ.க இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. வட இந்தியாவைப் போல வன்முறைக் கலாச்சாரத்தை தமிழகத்தில் அறிமுகம் செய்ய பா.ஜ.க திட்டமிட்டுள்ளதா? என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button