அரசியல்கவர் ஸ்டோரிசினிமாதமிழ்நாடுதூத்துக்குடி

நடிகர்கள் ரஜினி, கமல், விஜய் விமர்சித்து பேசிய தமிழக அமைச்சரால் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த அத்தைக்கொண்டான் கோமதி நகரில் உள்ள சங்கரகோமதி கோவில் கும்பாபிஷேக விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எம்.ஜி.ஆர். போல் சித்தரித்து நடிகர்களின் போஸ்டர் ஒட்டுவதால், எல்லோரும் அவரைப்போல் ஆக முடியாது என்றார்.

எம்.ஜி.ஆர். மறைந்து 32 ஆண்டுகளுக்கு பின்னரும், அவர் தொடங்கிய இயக்கம் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. ஆட்சியிலும் இருக்கிறது. 2021 தேர்தல் வருவதற்குள் நாங்கள் தான் முதல்வர் என ஆயிரம் பேர் வருவார்கள். தேர்தலில் டெபாசிட் வாங்க முடியாத கட்சிகளும், நாங்கள் தான் ஆட்சியை பிடிப்போம் என்று கூறி வருகிறார்கள் என அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சித்தார்.

கொரோனா பரவல் தொடங்கியது முதல் அரசின் நடவடிக்கைகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறைக்கூறி வருவதை தவிர ஆக்கபூர்வமான ஆலோசனைகள் எதுவும் வழங்கவில்லை. அவருக்கு யோசனை சொல்லவும் தெரியாது. ஸ்டாலினுக்கு தெரிந்தால் தானே சொல்ல முடியும். மக்கள் தன்னை மறந்து விடக்கூடாது என்பதற்காக மு.க.ஸ்டாலின் ஏதேதோ சொல்லி வருகிறார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button