இந்தியாகவர் ஸ்டோரிகிரைம்சினிமா

நடிகர் சுஷாந்த் சிங்கிற்கு போதைப் பொருள் கொடுத்த விவகாரம் – நடிகை ரியா சக்ரபோர்த்தி கைதாவாரா?

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி வீட்டில் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணம் குறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமான விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, சுஷாந்தின் காதலியான பாலிவுட் நடிகை ரியா சக்ரபோர்த்தி, பணம் மற்றும் பட வாய்ப்புகளுக்கு ஆசைப்பட்டு, அதிக டோஸ் உள்ள மருந்துகளை அவர் கொடுத்ததுடன், தற்கொலைக்கு தூண்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இந்த கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இதனையடுத்து, நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் முக்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படும் நடிகை ரியா சக்ரபோர்த்தியிடம், சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். ரியாவுக்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருந்தது அவரது வாட்ஸ் அப் உரையாடல்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சுஷாந்த் சிங்கிற்கு அவர் போதை பொருட்களை கொடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக ரியாவின் சகோதரர் ஷவ்மிக் சக்ரபோர்த்தி மற்றும் சுஷாந்தின் வீட்டு மேலாளர் சாமியூல் மிராண்டா ஆகியோரிடம் போதைபொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ரியா உத்தரவின் பெயரிலேயே சுஷாந்திற்கு போதை பொருட்களை வாங்கி கொடுத்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதனையடுத்து, ஷவ்மிக் சக்ரபோர்த்தி, சாமியூல் மிராண்டா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், போதை பொருட்களை பயன்படுத்தியது மற்றும் சுஷாந்திற்கு கொடுத்தது தொடர்பான விசாரணைக்கு ரியா சக்ரபோர்த்தி நேரில் ஆஜராக வேண்டும் போதைபொருள் தடுப்பு பிரிவினர் இன்று நேரில் சம்மன் அளித்தனர். இதனால்,  சக்ரபோர்த்தி அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button