தமிழ்நாடுநாமக்கல்

அதிமுக சிறப்பாக ஆட்சி செய்வதால் தமிழகத்தில் நடிகர் ரஜினி கட்சித் தொடங்க வாய்ப்பே இல்லை

நாமக்கல்லில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் போர் ஆரம்பிக்கும் சூழ்நிலை உருவானால் கட்சியை தொடங்குவேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார். ஆனால்,  தமிழகத்தில் அந்த மாதிரியான சூழ்நிலை தற்போது ஏற்படவில்லை. எனவே, ரஜினி கட்சி தொடங்குவதற்கான வாய்ப்பே இல்லை. தமிழ்நாட்டில் சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் அதிமுக கூட்டணிக்கு அவர் ஆதரவு தரவேண்டும்.

மேலும் தொடர்ந்து பேசிய யுவராஜா, ஆன்லைன் வகுப்பு குறித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் கருத்து அவருடைய சொந்த கருத்து. சில நேரங்களில்  அவரது கருத்தை பாஜகவினரே ஏற்பதில்லை. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஆன்லைன் வகுப்பு என்பது ஏழை, பணக்காரர் இல்லாமல் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும். இல்லையெனில் ஆன்லைன் வகுப்புகளை தடை செய்யவேண்டும் என அவர் கூறினார்.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button