அரசியல்கவர் ஸ்டோரிசென்னைதமிழ்நாடு

எம்.ஜி.ஆர். இடத்தை நடிகர் விஜய் மட்டுமின்றி யாராலும் நிரப்ப முடியாது – அமைச்சர் அதிரடி

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 149 ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

கூட்டணி குறித்து அமைச்சர்கள் பேசக்கூடாது என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் எங்களுக்கு கட்டளையிட முடியாது என்றார். நாங்கள் எம்.ஜி.ஆர் வழி நடப்பவர்கள். சசிகலா வந்தாலும், வராவிட்டாலும் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலா மற்றும் அவரது குடும்ப தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். பாஜகவின் புற அழுத்தம் காரணமாகவே இராமநாதபுரம் எஸ்.பி.வருண்குமார் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டினார்.

நடிகர் விஜய்யை எம்.ஜி.ஆராக சித்தரித்து ஒட்டப்பட்ட போஸ்டர் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமர், மீசை வைத்தவர்களெல்லாம் கட்டபொம்மனாகிவிட முடியாது. செஞ்சிக்கோட்டை ஏறியவர்கள் எல்லாம் ராஜாதேசிங்கு ஆகிவிட முடியாது என பதிலளித்தார்.

பா.ஜ.க – அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு ஏற்படுத்த அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் பேசுகிறார்களா? என்று கேள்விக்கு பதிலளித்த எச்.ராஜா, பா.ஜ.க-வை இழிவாகப் பேசுவதும், பிரதமர் மோடியை இழிவாகப் பேசுவதும் ஒன்றுதான் என சமீபத்தில் கருத்துத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button