கிரைம்தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சையில் உடன் பிறந்த அண்ணனை கம்பியால் அடித்து கொலை செய்த தம்பி

தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த திருக்காட்டுப்பள்ளி புதுசத்திரம் குடியானத் தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன் சந்திரசேகர் (40). இவர் தம்பி சோனி (எ) ராஜகோபால் (37). இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. இந்தநிலையில், தம்பி ராஜகோபால், தேவையில்லாமல்  ஊரை சுற்றி கடன் வாங்கி ஜாலியாக இருந்துள்ளார். இதனை தட்டிக்கேட்டதால் அண்ணன் சந்திரசேகருக்கும் ராஜகோபலுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த ராஜகோபால், அண்ணன் என்று பாராமல் சந்திரசேகர் தலையை கம்பியால் சரமாரி தாக்கியுள்ளார். படுகாயம் அடைந்த அவரை மீட்ட அவர்களது உறவினர்கள்,  தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமணையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சந்திரசேகர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

சந்திர சேகர் அக்கா போதும்செல்வி (55) புகார் அளித்ததின் பேரில் திருக்காட்டுப்பள்ளி காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதேவி வழக்கு பதிவு செய்தார். கொலை தொடர்பாக ராஜகோபாலை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கூடப் பிறந்த அண்ணனை, குடும்பத்தகராறில் தம்பியே அடித்து கொலை செய்தது அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button