விளையாட்டு

சென்னை அணியில் மேலும் ஒரு வீரர் விலகல்! ஐ.பி.எல் தொடரில் சென்னை அணி விளையாடுவது சந்தேகம்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இடம்பெறவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்க உள்ளது. போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இன்று வெளியிட உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டரான சுரேஷ் ரெய்னா சொந்த பிரச்சனை காரணமாக ஏற்கனவே ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகினார்.

இந்நிலையில் ஹர்பஜன் சிங்கும் சி.எஸ்.கே. அணியில் இடம்பெறவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரெய்னாவை தவிர்த்து ஏற்கனவே 2 பேர் கொரோனா தொற்றால் போட்டியிலிருந்து விலகி உள்ளனர். எனவே சி.எஸ்.கே அணியில் 13 பேர் மட்டுமே தற்போது இருப்பதால், ஐ.பி.எல். தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுவதற்கு வாய்ப்பு குறைவு என தகவல் வெளியாகி உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button