கிரைம்தமிழ்நாடுதிருவண்ணாமலை

ரூ.5 லட்சம் கேட்டு பாஸ்ட் ஃபுட் மாஸ்டர் கடத்தல் – திருவண்ணாமலையில் பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கோட்டை மூலை பகுதியில் உள்ள ஹோட்டலில் ராஜா முகமது என்பவர் ஃபாஸ்ட் ஃபுட் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த கோபி என்பவருக்கு இடைத் தரகராக இருந்து கார் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கார் விற்பனையில் மோசடி நடந்திருப்பதாக கூறி, சென்னையில் இருந்து வந்தவாசிக்கு கோபி மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் வந்துள்ளனர். பின்னர் ஓட்டலில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்த ராஜாமுகமதுவை சரமாரி அடித்து இழுத்து காரில் கடத்தி சென்றனர். இதுதொடர்பாக ராஜா முகமது உறவினரான முபாரக் என்பவரின் செல்போனில் பேசிய கடத்தல்காரர்கள், ராஜாமுகமது கார் விற்பனை செய்ததில் குளறுபடி செய்துள்ளதால் அவரை கடத்தியுள்ளதாகவும், ரூ.5 லட்சம் கொடுத்தால்தான் அவரை விடுவிப்போம் என்று மிரட்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ராஜா முகமதின் உறவினரான முபாரக், வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் தங்க ராமன் சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்து ராஜா முகம்மதை கடத்தி சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.

Related Articles

3 Comments

  1. I intended to draft you that very small remark in order to give many thanks once again regarding the superb advice you’ve featured at this time. It’s so seriously generous of people like you to give publicly all most of us would have supplied for an electronic book to get some profit on their own, certainly considering the fact that you might well have done it if you desired. These secrets as well worked like a fantastic way to fully grasp that the rest have similar keenness really like my own to learn significantly more on the subject of this problem. I believe there are a lot more pleasant sessions ahead for individuals who check out your website.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button