கிரைம்சினிமாதமிழ்நாடுதிருச்சி

ரயில்வே ஊழியரை கட்டி வைத்து சரமாரி அடித்த நடிகர் – திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்

திருச்சி கொட்டப்பட்டு ஐஸ்வர்யா நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் ( 56). ரயில்வே பணிமனையில் வேலை செய்யும் இவர், கடந்த சனிக்கிழமை, வேலை முடித்து வெளியே வந்தபோது, 3 பேர் அவரை வழிமறித்து இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்றனர்.  பின்னர்  தென்னூர் பகுதியில் ஆறுமுகத்தை கட்டி வைத்து சரிமரியாக அடித்துள்ளனர். இதுகுறித்து அவர் பொன்மலை போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

அதில், கடந்த 2019 ஆம் ஆண்டு மறைந்த நடிகர் அலெக்ஸின் மருமகனும் நடிகருமான ஜெரால்டு என்பவரிடம் ரூ.35 ஆயிரம் கந்து வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார் ஆறுமுகம். அந்த பணத்திற்கான வட்டியை தொடர்ந்து கட்டி வந்த நிலையில், கொரோனாவால் சில மாதமாக பணம் கட்டவில்லை என்றும், இதனால் வட்டிக்கு மேல் வட்டி கேட்டு மிரட்டி வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். எனவே, பணி முடித்து விட்டு நான் வெளியே வரும்போது மூன்று பேரும் தன்னை கடத்தி சென்று அடித்து உதைத்தாக ஆறுமுகம் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொன்மலை போலீசார், பாலக்கரை மல்லிகைப்புரத்தை சேர்ந்த நடிகர் ஜெரால்டு , மரியம் நகரை சேர்ந்த ஜெஸ்டின் ஜெபராஜ் (38) மற்றும் விசு ஆகிய மூன்று பேரை தேடி வந்தனர். இந்தநிலையில், ஜெஸ்டின் ஜெபராஜை அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேலும்,  தலைமறைவான நடிகர் ஜெரால்டையும் , விசுவையும் போலீீசார் தேடி வருகின்றனர்.

நடிகர் ஜெரால்டு பல தமிழ் படங்களில் துணை நடிகராக நடித்தவர். இவர் நடிகர் விஷாலின் பாண்டவர் அணியில் இருந்து நடிகர் சங்க தேர்தலை சந்தித்தவர் ஆவார். தமிழ் திரையுலகினர் பங்கேற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

7 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button