அரசியல்கிரைம்தமிழ்நாடுதிருச்சி

எச்.ராஜா தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்க முயல்கிறார் – திருச்சி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார்

ராமநாதபுரம் அருகே கள்ளர் தெரு பகுதியில் வசிக்கும் அருண்பிரகாஷ் என்பவர் முன் விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்த குற்றவாளிகளை தேடி வந்தனர். இதனிடையே,
வழக்கில் தொடர்புடைய ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த லெப்ட்சேக், சதாம், அஜீஸ், காசிம், ரஹ்மான் ஆகியோர் திருச்சி மாவட்டம், லால்குடி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இதுதொடர்பாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், இராமநாதபுரம் கள்ளர் தெருவைச் சேர்ந்த அருண் பிரகாஷ் என்பவரை, சின்னக்கடைத் தெருவைச் சேர்ந்த லெப்ட் சேக் மற்றும் 10 முஸ்லீம் மதவெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் என பதிவிட்டிருந்தார்.  இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து, யுனிவர்ஸல் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநிலத் தலைவர் ரபீக், எச்.ராஜா மீது திருச்சி மாநகர ஆணையர் காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

பின்னர் பேட்டியளித்த அவர், அமைதிப் பூங்காவான தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் எச்.ராஜா தொடர்ந்து பேசி வருகிறார். அவரை கைது செய்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் பொறுப்பேற்ற நாள் முதல் ரவுடிகள், கட்சியில் அடிப்படை உறுப்பினராக இணைந்து வருகின்றனர். இதன் மூலமாக தேர்தலை சீர்குலைத்து விடுவார்களோ? அல்லது மத வன்முறையை ஏற்படுத்தி விடுவார்களே என்ற பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. எனவே காவல்துறையினர், உளவுத் துறையினர் தீவிரமாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் யுனிவர்ஸல் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநிலத் தலைவர் ரபீக் கேட்டுக்கொண்டார்.

Related Articles

13 Comments

  1. Great items from you, man. I have take into account your stuff prior to and you are simply extremely great. I actually like what you have got right here, really like what you’re stating and the best way through which you are saying it. You are making it enjoyable and you still care for to keep it smart. I can’t wait to read much more from you. This is actually a terrific web site.

  2. hello!,I really like your writing very a lot!

    percentage we keep up to date a correspondence more about your post on AOL?
    I require a specialist for this house to solve my problem.
    Could be that’s you! Looking forward to peer you.

    Look at my webpage – AshleyPYuasa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button